Connect with us

பொழுதுபோக்கு

எங்க அப்பா மீது வந்த ஒரே புகார்; அதையும் அவர் பலமுறை வென்றார்; கே.பாலச்சந்தர் மகள் உருக்கம்!

Published

on

K Balachanad

Loading

எங்க அப்பா மீது வந்த ஒரே புகார்; அதையும் அவர் பலமுறை வென்றார்; கே.பாலச்சந்தர் மகள் உருக்கம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்த எம்.ஜி.ஆர் சிவாஜி நடிப்பில் படங்களை இயக்காமல் புதுமுக அல்லது ஓரிரு படங்களில் நடித்த நடிகர்களை வைத்து பெரிய வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் கே.பாலச்சந்தர். திரைத்துறையில் இவர் மீது பெரிய மரியாதை இருந்தாலும், இவரை பற்றிய புகாரும் இருந்துள்ளது என்று அவரது மகள் கூறியுள்ளார்.1965-ம் ஆண்டு வெளியான நீர்க்குமிழி படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் கே.பாலச்சந்தர். தொடர்ந்து, நாணல், மேஜர் சந்திரகாந்த், எதிர்நீச்சல், எதிரொலி, நான்கு சுவர்கள், இரு கோடுகள் என பல வெற்றிப்படங்களை இயக்கினார். இதில் எமத்.ஜி.ஆர் நடிப்பில் ஒரு படத்தை கூட இயக்காத கே.பாலச்சந்தர் சிவாஜி நடிப்பில், எதிரொலி என்ற ஒரு படத்தை மட்டும் இயக்கியிருந்தார். ஆனால் இந்த படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.ஜெமினி கணேசனை வைத்து பல படங்களை இயக்கிய பாலச்சந்தர், 1973-ம் ஆண்டு அரங்கேற்றம் படத்தின் மூலம் கமல்ஹாசனை ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். அதனைத்தொடர்ந்து 1975-ம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினிகாந்தை அறிமுகம் செய்தார். அதன்பிறகு தான் இயக்கிய பல படங்களில் ரஜினிகாந்த் கமல்ஹாசன் இருவரையும் வைத்து கதை அமைத்த கே.பாலச்சந்தர், 1979-ம் ஆண்டு இயக்கிய நினைத்தாலே இனிக்கும் படத்துடன் நிறுத்திவிட்டார்.அதன்பிறகு கமல்ஹாசன் – ரஜினிகாந்த் இருவரும் தனித்தனியாக நடிக்க தொடங்கிய நிலையில், இருவரும் பெரிய நடிகர்களாக மாறிவிட்டனர். அதன்பிறகு, புதுமுக நடிகர்களை வைத்து படம் இயக்கி தொடங்கி வெற்றிகளையும் கொடுத்தவர் கே.பாலச்சந்தர். ஒரு கட்டத்தில் ரஜினிகாந்த் கமல்ஹாசன் நடிப்பில் படங்கள் இயக்குவதை நிறுத்திய பாலச்சந்தர், அவர்கள் நடிப்பில் படங்களை தயாரித்தார். அவர் மீதான புகார்கள் மற்றும் விமர்சனங்கள் குறித்து அவரது மகள் புஷ்பா கந்தசாமி ஒரு பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்.இது குறித்து புஷ்பா கந்தசாமி அவள் விடகன் யூடியூப் சேனலில் கூறுகையில், சிவாஜி நடிப்பில் வெளியான எதிரொலி படம் தோல்வியடைந்தபோது, பெரிய இமேஜ் உள்ள நடிகர்களுக்கு தன்னால் படம் இயக்க முடியாது என்று புரிந்தது. அதனால் முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்குவதை நிறுத்திவிட்டார். தில்லு முள்ளு படத்திற்கு பிறகு, ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ஆனவுடன் அவருடன் அப்பா படம் பண்ணவே இல்லை. அவரின் இமேஜ் தன்னை தாண்டி போய்விட்டது என்பதாலும், இதையும் மீறி படம் எடுத்தால் அது ரஜினி படமாகவோ அல்லது பாலச்சந்தர் படமாகவோ இருக்காது என்றும் கூறியுள்ளார்.ஆரம்பத்தில் அவரை வளர்த்துவிட பல படங்கள் பண்ணார். வளர்ந்தபிறகு இனி இவர் தனியாக நடிக்கட்டும்என்று விட்டுவிட்டு, அவரது நடிப்பில் படங்களை தயாரிக்க தொடங்கினார். தான் படம் எடுத்தால் தனது விருப்பத்திற்கு தான் என்ன நினைக்கிறாரோ அது படத்தில் வர வேண்டும். நடிக்கும் நடிகர்களுக்கு திருப்தியை கொடுக்க வேண்டும். நம்பி படம் பார்க்க வரும் மக்கள் ஏமாற்றம் அடைய கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். இந்த மூன்றையும் அவர் கடைசிவரை கடைபிடித்தார். இதில் சிலமுறை மாற்றம் ஏற்பட்டு இருக்கலாம்.சிறு பட்ஜெட்டில் பல வெற்றிக்கள் கொடுத்ததற்கு அவரது தயாரிப்பாளர்கள் தான் காரணம். அதிக செலவு வைக்கமாட்டார். அவர் மேல் வைக்கும் ஒரே ஒரு புகார் என்னன்னா அதிகமாக படமாக்கிவிடுவார் என்று சொல்வார்கள். இப்போது டிஜிட்டல் இருந்தாலும் அந்த காலத்தில் ஃபிலிம்ரோல்கள் அதில் அதிகம் செலாகும் என்று சொல்வார்கள். ஆனால் அதை ஈடுகொடுக்கும் வகையில் படம் பெரிய வெற்றியாக இருக்கும். தனது முந்தைய படங்களின் காட்சிகளை அடுத்த படத்தில் வைக்காதவர். அதனால் படம் வெற்றியாகிவிடும். அடுத்த சம்பளம் என்று அவர் படத்திற்கு படம் உயர்த்தியதே இல்லை.ஒரு படம் வெற்றி பெற்றால் அடுத்த படத்தில் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்று அவர் செய்ததே இல்லை. தயாரிப்பாளர்கள் விரும்பி கொடுத்தால் வாங்கிக்கொள்வார். பணத்தை பற்றி கவலைப்படாமல், அடுத்த படத்திற்கான வேலையை தொடங்கிவிடுவார் அதில் தான் அவருக்கு விருப்பம் என்று கூறியுள்ளார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன