பொழுதுபோக்கு
ஓஹோ… நீங்க அங்க கனெக்ட் பண்றீங்களா? ‘கோட்’ படப்பிடிப்பில் வெங்கட் பிரபு தந்திரத்தை கண்டுபிடித்த விஜய்!

ஓஹோ… நீங்க அங்க கனெக்ட் பண்றீங்களா? ‘கோட்’ படப்பிடிப்பில் வெங்கட் பிரபு தந்திரத்தை கண்டுபிடித்த விஜய்!
தமிழ் சினிமாவில் ஜாலி இயக்குனர் வெங்கட் பிரபு. அஜித் நடிப்பில் மங்காத்தா, விஜய் நடிப்பில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் ஆகிய இரு படங்களை இயக்கிய தல தளபதி வைத்து படம் இயக்கிய இயக்குனர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த இரு படங்களிலும் ஹீரோக்களுடன் பைக்கில் செல்லும் காட்சியில் ஒரு நடிகர் நடித்துள்ளார்.2007-ம் ஆண்டு வெளியான சென்னை 28 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான வெங்கட் பிரபு, 2-வது இயக்கிய படம் சரோஜா. சென்னை 28 படத்தில் நடித்த சிவா, பிரேம்ஜி, ஆகியோருடன் எஸ்.பி.பி சரண், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் தான் வைபவ். தெலுங்கில் கோடவா என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவருக்கு தமிழில் சரோஜா தான் முதல் படம்.இந்த படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கிய, கோவா, மங்காத்தா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். குறிப்பாக மங்காத்தா படம் வெங்கட் பிரபுவின் சினிமா வாழ்க்கையில் பெரிய வெற்றியை கொடுத்த படமாக இன்றுவரை நிலைத்திருக்கிறது. அஜித், த்ரிஷா, அர்ஜூன், வைபவ், பிரேம்ஜி, மகத் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம், பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. குறிப்பாக அஜித் இந்த படத்தில் பைக் ஓட்டும் காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது.அதன்பிறகு வெங்கட் பிரபு இயக்கிய பிரியாணி, மாஸ், சென்னை 28 2, கஷ்டடி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்த வைபவ், கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்திலும் நடித்திருந்தார். அஜித் நடிப்பில் மங்காத்தா படத்தை இயக்கிய இவர், அடுத்து விஜய் நடிப்பில் இந்த படத்தை இயக்கி தல மற்றும் தளபதி படங்களை இயக்கிய பெருமை பெற்ற இயக்குனராக மாறிவிட்டார். இந்த படத்தில் இளம் வயது விஜய்க்கு நண்பராக வைபவ் நடித்திருந்தார்.இந்த படத்தின் ஒரு காட்சியில் விஜய் பைக் ஓட்டுவது போலவும், பின்னால் வைபவ் உட்கார்ந்திருப்பது போலவும் காட்சிகள் வரும். இந்த காட்சியை வைபவ் திட்டமிட்டு வைக்க சொல்லி வெங்கட் பிரபுவிடம் கூறியுள்ளார். இந்த காட்சியை எடுக்கும்போது, வைபவ் தான் பைக் ஓட்டுவதாக இருந்தது. ஆனால் அவர் வெங்கட் பிரபுவிடம் சொல்ல, நீங்க ஓட்டி அவன் உட்கார்ந்தால் தான் நன்றாக இருக்கும். அவன் ஓட்டி நீங்க உட்கார்ந்தால் அது சரி வராது என்று சொல்ல விஜயும் ஒப்புக்கொண்டு பைக்கில் ஏறி அமர்ந்துள்ளார்.அப்போது தான் அவருக்கு ஞாபகம் வர, அங்க கனெக்ட் பண்றீங்களா நீங்க, என்ற சொல்லி பைக்கில் இருந்து இறங்கியுள்ளார். அதன்பிறகு வெங்கட் பிரபுவை அழைத்து நீங்க யாரு ப்ரண்ஸ்ஸா எனக்கு புரியலையே, இப்போ அவரோட இவன் உட்கார்ந்து போனதால் இப்போ என்னோடவும் உட்கார்ந்து போகனும். நானும் இது புரியாம நம்மலதா ஹீரோயிசமாக ஓட்ட சொல்றானு நினைச்சுட்டேன் என்று கூறியுள்ளார். இந்த தகவலை வைபவ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.