இலங்கை
கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்திற்கு உதவிய அதிகாரிக்கு பிணை

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்திற்கு உதவிய அதிகாரிக்கு பிணை
முன்னிலை போதைப் பொருள் கடத்தல்காரர் என்று கூறப்படும் கணேமுல்ல சஞ்சீவ, புதுக்கடை நீதிமன்றில் வைத்து கொலை செய்யப்பட்ட போது, அதற்கு உதவினார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்த, காவல்துறை உறுப்பினருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
அத்துருகிரிய காவல்துறையில் பணியாற்றிய ஹசித ரொஷான் என்பவருக்கே கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி, அவரை 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், 2.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் செல்ல உத்தரவிட்டார்.
வழக்கின் சாட்சிகள் எவரையும் அச்சுறுத்தக்கூடாது என்றும் சந்தேக நபருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.