சினிமா
கருப்பு திரைப்படத்தில் சூர்யாவின் நெருப்பான பார்வை !ஆர்.ஜே. பாலாஜி பகிர்ந்த புகைப்படம்..!

கருப்பு திரைப்படத்தில் சூர்யாவின் நெருப்பான பார்வை !ஆர்.ஜே. பாலாஜி பகிர்ந்த புகைப்படம்..!
பாலிவுட்டிலும் கோலிவுட்டிலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நடிகர் சூர்யா, தனது அடுத்த படமான ‘கருப்பு’ திரைப்படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தின் இயக்குநராக ஆர்.ஜே. பாலாஜி உள்ளார் என்பது ஏற்கனவே பலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்த செய்தி!இந்நிலையில், இயக்குநர் பாலாஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூர்யாவின் நெருப்பு பார்வையுடன் கூடிய ஒரு படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் கருப்பு சட்டை, கூரிய பார்வை, பளீச் மின்னும் கண்கள் என ரசிகர்களை பதற்றப்படுத்தும் சூர்யாவின் லுக், படத்தின் மீது எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது.இந்த பதிவிற்கு நடிகர் சூர்யா ‘Waiting Director-eh’ என பதிலளித்துள்ளார். இது ரசிகர்களிடையே மிகப்பெரிய ட்ரெண்டாகியுள்ளது. இந்த பதில், படம் எப்போது வரும் என காத்திருக்கிறோம் எனும் ரசிகர்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதோடு, இயக்குநருக்கும் ஒரு உரையாடலாக இருந்தது.சமூக வலைதளங்களில் Karuppu, Suriya, RJBalaji போன்ற ஹாஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றன. ஒரு முறையாக காமெடியை இயக்கிய பாலாஜி, இப்போது ஒரு இருண்ட, தீவிரமான கதையை எடுத்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. ‘கருப்பு’ விரைவில் திரைக்கு வரவுள்ளது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்