இலங்கை
காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவரை விசாரணைக்கு அழைப்பு!

காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவரை விசாரணைக்கு அழைப்பு!
சமூக செயற்பாட்டாளரும், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ் மாவட்ட தலைவரும், காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவருமான இரத்தினசிங்கம் முரளிதரனை இம் மாதம் 20 திகதி அன்று காலை 9:00 மணிக்கு பரந்தனிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு சமூகமளிக்குமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவு தொலைபேசியூடாக அழைப்பு விடுத்துள்ளது.
மேலும் இதற்கான எழுத்துமூலமான அழைப்பை மருதங்கேணி பொலிஸார் வழங்குவார்கள் என அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.
இவர் சமூக செயற்பாட்டாளராக , காணி உரிமை, மீனவர்கள் உரிமை, உட்பட பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துவருகின்ற நிலையில் தற்போது கொழும்பில் காணி உரிமை தெடர்பான கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கும் வேளையில் இ்ந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.