இலங்கை
கூமாங்குளம் வன்முறை; இருவர் விளக்கமறியலில்

கூமாங்குளம் வன்முறை; இருவர் விளக்கமறியலில்
வவுனியா கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில், இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு வவுனியா, கூமாங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபரொருவர் வீதியில் விழுந்து உயிரிழந்தார். அவருடைய இறப்புக்கு. அந்தப் பகுதியில் பயணித்த போக்குவரத்துப் பொலிஸாரே காரணம் எனத் தெரிவித்து ஒரு குழுவினர் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் பொலிஸார் மீதும் தாக்குதல்களை நடத்தியிருந்தனர். இதைத் தொடர்ந்தே, வன்முறையில் ஈடுபட்ட இருவர் வவுனியா மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர், வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேசசபை உறுப்பினர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபட்ட ஏனையவர்களைக் கைது செய்வதற்கும் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் மேற்படி நபர் மாரடைப்புக் காரணமாகவே உயிரிழந்தார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.