இலங்கை
கொழும்பில் வீட்டின் அருகே சடலம் மீட்பு ; கொலையா? பொலிஸார் தீவிர விசாரணை

கொழும்பில் வீட்டின் அருகே சடலம் மீட்பு ; கொலையா? பொலிஸார் தீவிர விசாரணை
கொழும்பு ஹோமாகம, பனாகொட, சுஹத மாவத்தை பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஹோமாகம பொலிஸாரால் இன்று (17) சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
இது கொலையா அல்லது இயற்கை மரணமா என்பதை கண்டறிய தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து ஹோமாகம தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.