சினிமா
சரிகமப சீனியர் 5!! இதுவரை யாரும் பண்ணாத கெட்டப்புடன் இலங்கை தமிழர் சபேசன்..

சரிகமப சீனியர் 5!! இதுவரை யாரும் பண்ணாத கெட்டப்புடன் இலங்கை தமிழர் சபேசன்..
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சரிகமப. தற்போது சரிகமப சீனியர் சீசன் 5 விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.வாரவார புதுபுது ரவுண்ட்களை சந்தித்து வரும் போட்டியாளர்களுக்கு இந்தவாரம், Tentkotta Round நடந்துள்ளது. போட்டியாளர்கள், சினிமா படங்களில் வரும் கதாபாத்திரங்களை போல் வந்து பாடல்களை பாடியுள்ளனர்.அந்தவகையில் இலங்கையில் இருந்து வந்த சபேசன், அபூர்வ சகோதர்கள் படத்தின் அப்பு கேரட்க்டரை போல் குள்ளமான கெட்டப்பில் வந்து பாடியிருக்கிறார். அந்த கெட்டப்பில் வந்ததோடு தன்னுடைய குரலால் புது மாப்பிள்ளைக்கு பாடலை அனைவரும் மிரம்பித்து பார்க்கும்படி பாடியிருக்கிறார் சபேசன்.அவர் பாடிய பிரமோ வீடியோ இணையத்தில் தற்போது பகிரப்பட்டு அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறது.