சினிமா
சிவகார்த்திகேயன்-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் ‘மதராஸி!போஸ்டர் வெளியிட்ட படக்குழு!

சிவகார்த்திகேயன்-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் ‘மதராஸி!போஸ்டர் வெளியிட்ட படக்குழு!
சிறந்த இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், தமிழ்த் திரைப்படங்களின் முன்னணி நடிகராக வலம் வருகிற சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் ‘மதராஸி’. இப்படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி உலகமெங்கும் வெளியாவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.வெளியீட்டுக்கு இன்னும் 50 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தும் வகையில், படக்குழு புதிய போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில், சிவகார்த்திகேயனின் ஸ்டைலிஷ் மற்றும் மாஸ் லுக் தனிச்சிறப்பை பெற்றுள்ளது. ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறதுடன், எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே அனிருத் – சிவகார்த்திகேயன் கூட்டணியில் வந்த பாடல்கள் வெற்றியை கண்டுள்ள நிலையில், ‘மதராஸி’யின் பாடல்களுக்கும் பெரிய வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படம், சிவகார்த்திகேயனுக்கு ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமையும் என ரசிகர்கள் நம்புகின்றனர். மிகுந்த வேகத்தில் பின்னணி வேலைகள் நடைபெற்றுவரும் நிலையில், படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.