இலங்கை
சுகாதாரச்சீர்கேட்டுடன் பாண் விநியோகம் ரூ.60.000 தண்டம்
சுகாதாரச்சீர்கேட்டுடன் பாண் விநியோகம் ரூ.60.000 தண்டம்
போதிய சுகாதார வசதியின்றி, நடமாடும் முச்சக்கரவண்டி மூலம் பாண் விநியோகம் செய்த நபருக்கு 60 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
நீர்வேலியில் உள்ள வர்த்தகநிலையத்தில் சுகாதாரப்பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் குறித்த நபர் சிக்கினார். பாண் விநியோகத்துக்கான உரிமம் பெற்றுக் கொள்ளாமை, உணவைக் களஞ்சியப்படுத்துவதற்கான சுகாதாரவசதி முச்சக்கரவண்டியினுள் காணப்படாமை, சுகாதாரப்பிரிவினரிடம் மருத்துவ சான்றிதழ் பெற்றுக்கொள்ளாமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.