இலங்கை

சைபர் பாதுகாப்பை வலுப்படுத்தத் திட்டம்!

Published

on

சைபர் பாதுகாப்பை வலுப்படுத்தத் திட்டம்!

டிஜிற்றல் பொருளாதார அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் முன்வைக்கப்பட்ட இலங்கையின் தேசிய சைபர் பாதுகாப்புத்திட்டம்-2025-2029 ஐ செயற்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

உலக வங்கியின் ஆதரவுடன் இலங்கைக் கணினி அவசரத் தயார் நிலை குழு உருவாக்கிய இந்தத் திட்டம், 2018 இல் அறிமுகப்படுத்தப்பட்டு 2019 மற்றும் 2023க்கு இடையில் செயற்படுத்தப்பட்ட நாட்டின் முதல் சைபர் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டது. சட்டம் மற்றும் ஒழுங்குமுறைக் கட்டமைப்பை மேம்படுத்துதல், சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வை மேம்படுத்துதல், தயார் நிலையை மேம்படுத்துதல். உள்ளிட்ட கருப்பொருள்களை இந்தத் திட்டம் மையப்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version