இலங்கை
தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்ட நபர் பிணையில் விடுதலை!

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்ட நபர் பிணையில் விடுதலை!
கொழும்பில் உள்ள ஹேவ்லாக் சிட்டி வீட்டு வளாகத்தில் ஒரு பெண்ணிடம் தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரை பிணையில் விடுவிக்க கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள விசாகா ஐரங்கனி வீரகோன் என்ற சந்தேக நபர் சமர்ப்பித்த பிணை விண்ணப்பத்தை பரிசீலித்த பின்னர் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா திரகரத்ன இந்த உத்தரவை பிறப்பித்தார்.
அதன்படி, சந்தேக நபரை 250,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 2.5 மில்லியன் ரூபாய் இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவையும் பிணையில் விடுவிக்க கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை