இலங்கை
தற்போதைய கைதுகள் முறையாகவே நடக்கின்றன; லக்ஷ்மன் நிபுணாராய்ச்சி தெரிவிப்பு

தற்போதைய கைதுகள் முறையாகவே நடக்கின்றன; லக்ஷ்மன் நிபுணாராய்ச்சி தெரிவிப்பு
சரத் பொன்சேகாவை இழுத்துக்கொண்டுபோய் சிறையில் தள்ளியது போன்று நாம் எவரையும் இழுத்துக்கொண்டு போய் தள்ளவில்லை என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றஉறுப்பினர் லக்ஷ்மன் நிபுணாராய்ச்சி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டவர்கள் உரிய முறையில் விசாரணை நடத்தப்பட்டு, பொலிஸாரால் முறையாகக் கைது செய்யப்படுகிறார்கள்.
கடந்த அரசுகளில் இடம்பெற்ற கைதுகள் அனைத்தும் கைதுகள் அல்ல. எல்லாமே அரசியல் பழிவாங்கல்கள். பலவந்தமாக இழுத்துக்கொண்டு போய் சிறையில் தள்ளினார்கள். அரசியல் பழிவாங்கல்களுக்கு நீண்ட வரலாறு உண்டு. அந்த வரலாற்றை நாம் பார்த்துள்ளோம். அதற்கு இலக்காகி இருக்கிறோம். எமது அரசில் அப்படி எதுவும் நடக்கவில்லை. இப்போது இடம்பெறும் கைதுகள் தொடர்பில் மக்கள் மகிழ்ச்சியடைகின்றார்கள். இது அவர்களுக்கு நாம் வழங்கிய வாக்குறுதி அதை நாம் நிறைவேற்றி வருகிறோம்- என்றார்.