இலங்கை
தேவை இல்லாமல் மூக்கை நுழைத்த துணை முதல்வர் ; இரவு 07 மணி வரை நீடித்த யாழ் மாநகர சபை அமர்வு

தேவை இல்லாமல் மூக்கை நுழைத்த துணை முதல்வர் ; இரவு 07 மணி வரை நீடித்த யாழ் மாநகர சபை அமர்வு
யாழ்ப்பாண மாநகர சபை துணை முதல்வரின் செயற்பாட்டினால் சபை அமர்வு இரவு 07 மணி வரையில் நீடித்ததாக குற்றம் சாட்டப்படுகிறது.
யாழ் மாநகர சபையின் மாதாந்த அமர்வு மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா தலைமையில், நேற்றைய தினம் (16) மாநகர சபை சபா மண்டபத்தில் நடைபெற்றது.
அதன்போது, முதல்வர் பதில் வழங்க வேண்டிய விடயங்களில் துணை முதல்வர் அடிக்கடி தலையீடு செய்து கொண்டிருந்ததால் நீண்டநேரம் இழுபறி ஏற்பட்டது.
விவாதங்களின் போது உறுப்பினர்கள் முதல்வரிடம் குறிப்பிடும் விடயங்களுக்கும், முதல்வர் தெரிவிக்கவேண்டிய பதில்கள் ஒவ்வொன்றுக்கும் பதில் முதல்வர் தேவையற்ற வகையில் தலையிட்டு தனது கருத்துகளை தெரிவித்தார்.
ஒவ்வொரு விடயத்திலும் தலையிட்டு நீண்ட விளக்கத்தை வழங்கினார். அதனால் காலை 10 மணிக்கு ஆரம்பித்த அமர்வு இரவு 7 மணிவரை இடம்பெற்றமைக்கு துணை முதல்வரின் செயற்பாடும் காரணம் என தெரிவிக்கப்பட்டது.