பொழுதுபோக்கு
நானும் அவரும் ஒன்னா தான் இருந்தோம்; திருடன் சொன்னதால் சந்தானத்தை பிடித்த போலீஸ்: காட்டுப் பூச்சி காட்டிய வேலை!

நானும் அவரும் ஒன்னா தான் இருந்தோம்; திருடன் சொன்னதால் சந்தானத்தை பிடித்த போலீஸ்: காட்டுப் பூச்சி காட்டிய வேலை!
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் காமெடிக்கு பஞ்சமே இல்லாமல் இருந்தது என்று கூறலாம். ஏனெனில், கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் என்று ஜாம்பவான்கள் அனைவரும் மக்களை மகிழ்வித்து வந்தனர். இவர்களின் வரிசையில் நடிகர் சந்தானத்திற்கும் முக்கிய இடம் இருக்கிறது.ஆரம்பத்தில், சின்னத்திரையில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சியின் மூலம் தனது கலை பயணத்தை தொடங்கிய சந்தானம், அதன் பின்னர் சிம்புவின் ‘மன்மதன்’ திரைப்படம் மூலமாக பலரது கவனத்தையும் ஈர்த்தார்.தனது காமெடியில் கவுண்டமணியின் பாணியை சந்தானம் பின்பற்றினார். அது அவருக்கு மிகவும் இயல்பாக பொருந்திப் போனது. ரஜினிகாந்த, அஜித், விஜய், ஜீவா, ஆர்யா என்று அனைத்து முன்னணி கதாநாயகர்களுடனும் இணைந்து சந்தானம் பணியாற்றினார். இது தவிர அறிமுக ஹீரோக்களின் படங்களிலும் சந்தானத்தின் பங்களிப்பு முக்கியமானது.குறிப்பாக, இயக்குநர் ராஜேஷின் ‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் (எ) பாஸ்கரன்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ போன்ற படங்களில் சந்தானத்தின் காமெடி அட்டகாசமாக இருக்கும். இதேபோல், கார்த்தி – சந்தானம் காம்பினேஷனில் வெளியான ‘சிறுத்தை’ திரைப்படம் இன்று வரை ரசிகர்களுக்கு ஃபேவரட்டாக உள்ளது. அந்த வகையில், அப்படத்தில் சந்தானம் ஏற்று நடித்த ‘காட்டுப்பூச்சி’ கதாபாத்திரம் உருவான விதம், அதனால் அவருக்கு ஏற்பட்ட சிக்கல் போன்றவற்றை ஒரு நிகழ்வில் சந்தானம் பகிர்ந்து கொண்டார்.அதன்படி, “சிறுத்தை திரைப்படத்தில் நானும், கார்த்தியும் திருடன் கதாபாத்திரத்தில் நடித்தோம். இதற்காக நிஜமான திருடர்களை கண்டிபிடித்து அவர்களை ஃபாலோ செய்தால், கதாபாத்திரத்திற்கு உதவியாக இருக்கும் என்று தேடினோம்.எதிர்பார்த்தபடி, ஒரு நிஜ திருடனை கண்டுபிடித்தேன். அதன் பின்னர், திருடர்கள் எவ்வாறு செயல்படுகின்றனர், அவர்களின் உடல்மொழி எவ்வாறு இருக்கிறது என்று கவனித்தேன். இந்த சூழலில், சுமார் இரண்டு நாட்களுக்கு பிறகு, போலீசார் என் வீட்டிற்கு வந்தனர்.நான் தொடர்பு கொண்ட திருடன், ஏதோ குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளான். அவனை விசாரித்த போது, இரண்டு நாட்களாக என்னுடன் இருந்ததாக போலீசாரிடம் கூறி இருக்கிறான். இதனால், என்னை தேடி போலீசார் வீட்டிற்கு வந்து விட்டனர். இதன் பின்னர், அந்தப் பிரச்சனையை சரி செய்தோம். அந்த திருடனின் பெயர் தான் காட்டுப்பூச்சி” என்று நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்.