பொழுதுபோக்கு
நீங்க நடிச்சா தான் என் படம் ஒடும்னு சொல்றீங்கலாமே? விடிவி கணேஷை மடக்கிய சிம்பு: த்ரோபேக் வீடியோ!

நீங்க நடிச்சா தான் என் படம் ஒடும்னு சொல்றீங்கலாமே? விடிவி கணேஷை மடக்கிய சிம்பு: த்ரோபேக் வீடியோ!
நடிகர் சிம்பு, கிண்டல் செய்யும் விதமாக கேள்வி கேட்டு அதற்கு விடிவி கணேஷ் பதில் சொல்ல முடியாமல் தவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுபற்றி தி சினிமாகிளப் யூடியூப் பக்கத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். நடிகர் சிம்பு மற்றும் நடிகர்-தயாரிப்பாளர் விடிவி கணேஷ் ஆகியோரின் உறவு தமிழ் திரையுலகில் ஒரு தனித்துவமான நட்பு மற்றும் தொழில்முறை பிணைப்பைக் கொண்டுள்ளது. இவர்கள் இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றியுள்ளனர். அத்துடன், பொதுவெளிகளிலும், நேர்காணல்களிலும் ஒருவரையொருவர் கேலி செய்தும், பாராட்டிக் கொண்டும் பேசுவது அவர்களின் நெருக்கமான நட்புக்குச் சான்றாக அமைகிறது.விடிவி கணேஷின் திரையுலகப் பயணம் 2002ல் ‘ரெட்’ படத்துடன் தொடங்கியிருந்தாலும், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ (2010) திரைப்படம் தான் அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்தப் படத்தில் ‘கணேஷ்’ என்ற ஒளிப்பதிவாளர் கதாபாத்திரத்தில் விடிவி கணேஷ் நடித்திருந்தார். சிம்புவின் நண்பராகவும், அவரது சினிமா பயணத்தில் துணையாகவும் வரும் இந்தக் கதாபாத்திரம் பெரும் வரவேற்பைப் பெற்றது. திரையில் மட்டுமல்லாமல், நிஜ வாழ்க்கையிலும் சிம்புவும் விடிவி கணேஷும் நெருங்கிய நண்பர்களாக உள்ளனர். விடிவி கணேஷ் பல நேர்காணல்களில் சிம்புவின் குணம், அவரது நட்பு மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேசியுள்ளார். சிம்பு, விடிவி கணேஷிடம், “அது என்னன்னு எனக்கு புரியல. எல்லா சிம்பு படத்துலயுமே இப்ப நான் நடிக்கிறேன். நான் நடிச்சாதான் சிம்பு படத்துல நடிப்பாரு, நான் நடிச்சாதான் சிம்பு படம் நல்லா ஓடும் அப்படின்னு எல்லாம் ஏதோ பேசுறீங்களாமே வெளியில நியூஸ் கேள்விப்பட்டேன். அதனால கேக்குறேன்,” என்று வெளிப்படையாகக் கேட்டுள்ளார்.இதற்குப் பதிலளிக்கும் முடியாமல் தவித்த விடிவி கணேஷ், “இப்படி ஒரு பேச்சு பேசத் தெரிஞ்சா போட்டுருக்கவே மாட்டேன்!” என்று சமாளிக்கிறார். சிம்பு தொடர்ந்து, “எனக்கு அதான் புரியல. என்ன இது? உன்ன ஒன்னு கேக்குறேன். திடீர்னு நல்லா பேசுறீங்க, திடீர்னு ஒரு மாதிரி பேசுறீங்க. என்ன ஒண்ணுமே புரிய மாட்டேங்குது,” என்று கேட்க, விடிவி கணேஷ், “ஒரிஜினல் குடிகார கேரக்டர் இருக்குல்ல? குடிச்சா ஒரு மாதிரி பேசுறேன், குடிக்காத போது ஒரு மாதிரி பேசுறேன்ல? அந்த மாதிரி அது இந்த மாதிரிதான்,” என்று தனக்கே உரிய பாணியில் வேடிக்கையாகப் பதிலளித்துள்ளார்.சிம்பு மீண்டும், “யோ, சரி, அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லு,” என்று வற்புறுத்த, விடிவி கணேஷ், “அதுமாதிரி எல்லாம் ஒண்ணுமே கிடையாது சிம்பு. நீ சொன்னதுனாலதான நடிச்சேன். இல்லாட்டி நான் பாட்டுக்கு சும்மா இருந்திருப்பேன், நான் கேட்கவே இல்லையே,” என்கிறார்.