சினிமா
பணி 2 படத்தின் டைட்டில் ரிவீல் செய்த ஜோஜு ஜார்ஜ்…! வைரலாகும் புது அப்டேட்..!

பணி 2 படத்தின் டைட்டில் ரிவீல் செய்த ஜோஜு ஜார்ஜ்…! வைரலாகும் புது அப்டேட்..!
மலையாள சினிமாவின் பிரபல நடிகரான ஜோஜு ஜார்ஜ், இயக்குநராக அறிமுகமான பணி திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடையிலும் மிகச்சிறந்த வரவேற்பைப் பெற்றது. தனது முதல் இயக்குநர் பயணத்திலேயே பெரிய வெற்றியை பெற்ற ஜோஜு, தற்போது அதன் தொடர்ச்சியாக பணி 2 படத்தினை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.இந்தப் படங்களில் முதல் பாகத்துக்கு நேரடி தொடர்பே இல்லாமல், புதுமையான கதைக்களத்துடன், புதுமுகங்கள் மற்றும் புதிய சூழல்களில் இப்படங்கள் உருவாகவுள்ளன. குறிப்பாக பணி 2 திரைப்படத்தின் தலைப்பை ஜோஜு ஜார்ஜ் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். படத்திற்குப் டீலக்ஸ்என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அவர் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.