இலங்கை
பழிபோடும் அநுர அரசு;அரச அதிகாரிகள் விரைவில் வீதிக்கு இறங்குவார்கள்! நாமல் எச்சரிக்கை

பழிபோடும் அநுர அரசு;அரச அதிகாரிகள் விரைவில் வீதிக்கு இறங்குவார்கள்! நாமல் எச்சரிக்கை
தேசிய மக்கள் சக்தியின் அரசியல் செயற்பாட்டாளர்களாக செயற்பட்ட சானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோரின் நியமனம் தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்ட விடயம் பாரதூரமானது என நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் நடுத்தர மக்களை பாதுகாப்பதாக குறிப்பிட்டார்கள்.
ஆனால் இன்று நடுத்தர மக்களின் தொழில் நடவடிக்கைகளை முற்றாக இல்லாதொழிக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது.
ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு விவகாரம் மற்றும் கொள்கலன் விடுவிப்பு விவகாரத்தில் அரசாங்கத்தின் முறைகேடான செயற்பாடு அரச அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டுள்ளது. அரச சேவையாளர்கள் அரசாங்கத்துக்கு எதிராக வெகுவிரைவில் குரல் எழுப்புவார்கள்.
தேசிய மக்கள் சக்தியின் அரசியல் செயற்பாட்டாளர்களாக செயற்பட்ட சானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோரின் நியமனம் தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்ட விடயம் பாரதூரமானது.
இவ்விடயத்தில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மீது பழிபோட அரசாங்கம் முயற்சிக்கிறது.
அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்ட விடயத்தின் உண்மையை கத்தோலிக்க சபை வெளிப்படுத்த வேண்டும். என்றார்