சினிமா
பெரும் சர்ச்சையில் சிக்கிய விஜயின் த.வெ.க கொடி விவகாரம்..! ஐகோர்ட் எடுத்த அதிரடி முடிவு.!

பெரும் சர்ச்சையில் சிக்கிய விஜயின் த.வெ.க கொடி விவகாரம்..! ஐகோர்ட் எடுத்த அதிரடி முடிவு.!
தமிழ்நாட்டில் சமீப காலமாக தலைவர் விஜய் தொடங்கிய அரசியல் கட்சியான “த.வெ.க” பெரிதும் பேசப்பட்டு வருகின்றது. பொதுவெளியில் கட்சி கொடி, கொள்கைகள் என பிரசாரம் வேகமாக நடைபெற்று வரும் இந்த சூழலில், த.வெ.க கட்சியின் கொடியை எதிர்த்து ஒரு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தது.இந்த வழக்கு திடீரென அரசியல், சட்ட வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கிடையில், த.வெ.க தலைவர் விஜய்க்கு தற்போது நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இந்த வழக்கை தொடர்ந்தவர் தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபையின் தலைவர் திரு. பச்சையப்பன். அவர் தாக்கல் செய்த மனுவில்,பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்ட தங்களது சபையின் கொடி நிறத்தில், த.வெ.க கொடி உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், தலைவர் விஜய் மற்றும் த.வெ.க கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பி, இந்த வழக்கின் மீது பதிலளிக்க உத்தரவு வழங்கியுள்ளது. எனினும், இந்த வழக்கு குறித்து தலைவர் விஜயோ, அவரின் கட்சியினரோ எந்தவிதமான பதிலும் இதுவரை வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.