இலங்கை
பொரளை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் : சந்தேக நபர்கள் கைது !

பொரளை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் : சந்தேக நபர்கள் கைது !
பொரளை பொலிஸ் பிரிவின் சர்பன்டைன் வீதி பகுதியில் கடந்த 08 ஆம் திகதி கடையொன்றில் நபரொருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நபரொருவர் மீது துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு தப்பிச் சென்ற சம்பவம் குறித்து பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, பொரளை பொலிஸ் அதிகாரிகள் நேற்று புதன்கிழமை (16) சஹஸ்புர பகுதியில் இந்தக் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த சந்தேகநபர், குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இம்புல்கஸ்தெனிய பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் வழங்கிய தகவலின் அடிப்படையில், இந்த குற்றத்தில் ஈடுபட்ட மற்றொரு சந்தேக நபர் நேற்று சீவலி பகுதியில் 11 கிராம் 115 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொரளை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவராவார்.
சந்தேக நபரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது, இந்தக் குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட போலியான வாகன உரிமத் தகடு, ஒரு வாள், முச்சக்கர வண்டி மற்றும் ஒரு தொலைபேசி என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை