இலங்கை
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி!

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி!
கொழும்பு – கல்கிஸ்ஸை பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 6 பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கல்கிஸ்ஸை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் நேற்று (16) மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில் மசாஜ் நிலையத்தின் பெண் உரிமையாளரும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் கடவத்தை, கஹடகஸ்திகிலிய, கொடகவெல, அக்மீமன, மெதிரிகிரிய மற்றும் மினுவாங்கொடை 38 முதல் 70 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.