Connect with us

இலங்கை

மன்னாரில் காற்றாலை திட்டம் உடனடியாக நிறுத்தவேண்டும் – அருட்தந்தை மக்காஸ் எச்சரிப்பு!

Published

on

Loading

மன்னாரில் காற்றாலை திட்டம் உடனடியாக நிறுத்தவேண்டும் – அருட்தந்தை மக்காஸ் எச்சரிப்பு!

மன்னாரில் மேலதிகமாக அமைக்கப்பட்டு வரும் 5 காற்றாலை திட்டத்தை உடனடியாக நிறுத்தாவிட்டால் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் வெடிக்கும்  என்று  மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மக்காஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.

மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்தில் நேற்று (16) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 

Advertisement

எமது வளங்களை அபகரிக்கும் நோக்கத்துடன், கனிய மணல் அகழ்வு தொடர்பாக பல நிறுவனங்கள் மற்றும் திணைக் களங்கள் மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் தமது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஏற்கனவே மன்னாரில் நிறுவப்பட்ட 30 காற்றாலைகளை தொடர்ந்து மேலும் 05 காற்றாலைகள் மக்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பல நிறுவனங்கள் இலங்கை மின்சார சபையின் அனுசரணையுடன் முன்னெடுத்து வருகின்றனர்.

எனவே அவர்களுக்கு நாங்கள் மேலும் ஒரு வார கால அவகாசத்தை வழங்குகின்றோம். குறித்த வேலைத்திட்டத்தை உடனடியாக நிறுத்தி வேறு இடத்திற்கு காற்றாலை திட்டத்தை மாற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம். நிலங்களை பாதுகாக்கும் உரிமை வாழிடங்களில் வாழ்கின்ற மக்களுக்கு உள்ளது. அது அவர்களின் பிறப்புரிமை.எனவே அந்த நிலங்களை உங்களால் ஒருபோதும் பறித்து எடுக்க முடியாது.

Advertisement

எனவே இத்திட்டத்தை நிறுத்தாவிட்டால் நாங்கள் அத்திட்டத்தை நிறுத்த நடவடிக்கை மேற்கொண்டால் உங்களுக்கு பல கோடி ரூபா நஷ்டம் ஏற்படும்.எனவே உங்களை பாதுகாத்துக் கொள்ள உடனடியாக மேலதிகமாக அமைக்கப்பட்டு வரும் 5 காற்றாலை திட்டத்தை உடனடியாக நிறுத்தி மக்களின் வாழ்வுக்கு உத்தரவாதம் வழங்க வேண்டும் – என்றார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன