இலங்கை

மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்; சமூக நீதிக்கான தேசிய இயக்கம் வலியுறுத்து!

Published

on

மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்; சமூக நீதிக்கான தேசிய இயக்கம் வலியுறுத்து!

மாகாணசபைத் தேர்தல் முறைமையில் நிலவும் சிக்கல் தொடர்பாக அவதானம் செலுத்தவேண்டியது அவசியமானது. ஆனால் தேர்தலைக் காலம் தாழ்த்துவதற்கு அது காரணமாகப் பயன்படுத்தப்படக்கூடாது என்று சமூகநீதிக்கான தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையிலான சமூக நீதிக்கான தேசிய இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- அரச இயந்திரத்தின் கீழ் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட கட்டமைப்புகளில் மாகாணசபைகள் தவிர்ந்த ஏனைய சகல கட்டமைப்புகளும் தற்போது இயங்கு நிலையில் உள்ள பின்னணியில், மாகாணசபைகளைத் தொடர்ந்தும் நிறைவேற்றதிகார நிர்வாகத்தின்கீழ் வைத்து, மக்கள் பிரதிநிதிகள் தெரிவை முடக்குவது என்பது அரசமைப்புக்கு முரணானது மாத்திரமன்றி, மக்களின் ஆணை வழங்கல் அதிகாரத்தையும் பறிப்பதாகவே அமையும். ஜனநாயகத்தை நேசிக்கும் அனைவரும் இவ்விடயம் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தவேண்டும். தேவையேற்படின், ஜனாதிபதி விசேட ஆணைக்குழுவொன்றை நியமித்து பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்ளலாம். எந்தவொரு விடயத்தையும் உரிய காலப்பகுதியில் நடத்தப்படவேண்டிய மாகாணசபைத் தேர்தல்களைக் காலந்தாழ்த்துவதற்கான காரணமாகப் பயன்படுத்தக்கூடாது – என்றுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version