Connect with us

சினிமா

மீனாவின் வருகையால் குதூகலத்தில் முத்து..! ஸ்ருதியின் செயலால் கோபமடைந்த ரவி…டுடே எபிசொட்!

Published

on

Loading

மீனாவின் வருகையால் குதூகலத்தில் முத்து..! ஸ்ருதியின் செயலால் கோபமடைந்த ரவி…டுடே எபிசொட்!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, முத்து வீட்டுக்கு வந்து சரியா பசிக்குது ஏதும் சாப்பிட இருக்கா என்று பாக்கிறார். அப்ப மேசையில இருந்த சாப்பாட்டை சாப்பிட்டு பாத்திட்டு மீனா தான் செய்திருக்கிறாள் என்று நினைத்து சந்தோசப்படுறார் முத்து. பின் ஸ்ருதி மீனாவைப் பார்த்து நீங்க சொன்ன மாதிரியே முத்து உங்கட சாப்பாட்டை சாப்பிட்டு பாத்திட்டு கண்டுபிடிச்சிட்டார் என்று சொல்லுறார். இதனை அடுத்து முத்து மீனாவ பார்த்தவுடனே எதுவும் கதைக்காமல் அமைதியாக இருக்கிறார். பின் ஸ்ருதி வந்து பாவம் மீனா நீங்க பேசினதுக்கு ரொம்பவே கவலைப்பட்டாங்க என்று சொல்லுறார். அதைத் தொடர்ந்து மீனாவும் முத்துவும் கதைச்சுக் கொண்டிருக்கிறார்கள். பின் முத்து மீனாவப் பார்த்து நீ என்ன பார்க்கிறதுக்காக தானே இங்க வந்தனீ என்று சொல்லுறார். அதுக்கு மீனா நான் மாமாவுக்காக தான் வந்தனான் என்கிறார். அதைக் கேட்ட முத்து சோகமாக அப்ப நீ என்ன பார்க்க வரலயா என்று கேட்கிறார். இதனை தொடர்ந்து ஸ்ருதி மீனாவும் முத்துவும் விளையாடுறதைப் பார்த்து தானும் ரவி கூட விளையாடிக் கொண்டிருக்கிறார். அதுக்கு ரவி இதெல்லாம் எனக்கு சரிவராது என்று கோபமாக சொல்லுறார். மறுநாள் காலையில  மீனாவுக்கு சீதா போன் எடுத்து என்ர அத்த அம்மாவ மாதிரியே பார்த்துக் கொண்டிருக்கிறார் என சந்தோசமாக சொல்லுறார். பின் சீதா நாளைக்கு இங்க மாப்பிள்ளை விருந்து வைக்கிறாங்க நீயும் மாமாவும் வரணும் என்கிறார். அதுக்கு மீனா நான் அவர்கிட்ட பேசி பார்க்குறேன் என்று சொல்லுறார். இதனை தொடர்ந்து முத்து அருண் வீட்ட எல்லாம் வரமுடியாது என்று சொல்லுறார். பின் மீனா சீதா வீட்ட விருந்துக்காக வெளிக்கிட்டுப் போறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன