இலங்கை
முதல்வரின் விடயத்தில் மூக்கை நுழைத்த துணைமுதல்வர்; நேற்றைய அமர்வில் கடும் நேரவிரயம்!

முதல்வரின் விடயத்தில் மூக்கை நுழைத்த துணைமுதல்வர்; நேற்றைய அமர்வில் கடும் நேரவிரயம்!
யாழ்ப்பாணம் மாநகரசபையின் அமர்வின் போது, முதல்வர் இருக்கத்தக்கதாக, முதல்வர் பதில் வழங்க வேண்டிய விடயங்களில் துணை முதல்வர் அடிக்கடி தலையீடு செய்து கொண்டிருந்ததால் நீண்டநேரம் இழுபறி ஏற்பட்டது.
விவாதங்களின் போது உறுப்பினர்கள் முதல்வரிடம் குறிப்பிடும் விடயங்களுக்கும், முதல்வர் தெரிவிக்கவேண்டிய பதில்கள் ஒவ்வொன்றுக்கும் பதில் முதல்வர் தேவையற்றவகையில் தலையிட்டுக் கருத்துகளை வெளியிட்டபடி கொண்டிருந்தார். ஒவ்வொரு விடயத்திலும் தலையிட்டு நீண்ட விளக்கத்தையும் அவர் வழங்கினார். காலை 10 மணிக்கு ஆரம்பித்த அமர்வு இரவு 7 மணிவரை இடம்பெற்றமைக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது.