இலங்கை
மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளான கார் ; இருவர் படுகாயம்

மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளான கார் ; இருவர் படுகாயம்
மஹரகம, நாவின்ன ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று (16) இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காரொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்தின்போது மோட்டார் சைக்கிளில் இருந்த இருவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மஹரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.