சினிமா
“மோனிகா..” பாடலின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட பூஜா ஹெக்டே!

“மோனிகா..” பாடலின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட பூஜா ஹெக்டே!
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் மிகுந்த எதிர்பார்ப்பு கொண்ட திரைப்படம் தான் ‘கூலி’. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படம், ரஜினியின் ஸ்டைலிஷ் கேரக்டரை வெளிப்படுத்தும் ஒரு பிரமாண்ட முயற்சி எனக் கருதப்படுகிறது.இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் இரண்டாவது பாடலான “மோனிகா..” எனும் மெலடி மற்றும் மாஸ் கலந்துள்ள பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.இந்த பாடலில், நாயகியான பூஜா ஹெக்டே ஒரு ரெட் கலர் உடையுடன் ஸ்டைலிஷாக, நவீன நடன வடிவங்களில் துள்ளி ஆடியிருந்தார். இது சினிமா ரசிகர்களை மட்டுமல்ல, டான்ஸ் லவ்வெர்ஸையும் ஈர்த்திருந்தது.அத்தகைய பாடலின் வீடியோ வெளியாகிய பின், YouTube-ல் மில்லியன்களுக்கும் மேலான பார்வையாளர்கள் லைக் கொடுத்திருந்தனர். தற்பொழுது, அந்த பாடலின் மேக்கிங் வீடியோவை பூஜா ஹெக்டே தனது Instagram பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வைரலான வீடியோ இதோ…