இலங்கை
யாழில் இருந்து கொழும்பு சென்ற ரயில் மோதி நபர் பலி

யாழில் இருந்து கொழும்பு சென்ற ரயில் மோதி நபர் பலி
வவுனியா ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று (16) இரவு ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இரவுநேரை தபால் ரயிலில் மோதியே இவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.