தொழில்நுட்பம்
ரூ.9,499-ல் வீட்டிலே சினிமா அனுபவம்: 100-இன்ச் டிஸ்ப்ளே வரை ப்ரொஜெக்ஷன்!

ரூ.9,499-ல் வீட்டிலே சினிமா அனுபவம்: 100-இன்ச் டிஸ்ப்ளே வரை ப்ரொஜெக்ஷன்!
போர்ட்ரானிக்ஸ் நிறுவனம் தனது புதிய பீம் 540 என்ற சிறிய LED ப்ரொஜெக்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. திங்கள்கிழமை அன்று அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ப்ரொஜெக்டர், OTT செயலிகள் மற்றும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் 720p நேட்டிவ் ரெசல்யூஷனுடன் வருகிறது. மேலும் 4,000 lumens பிரகாசத்தை வழங்குகிறது. ஆட்டோ-ஃபோகஸ் வசதியுடன் வருவதால், தெளிவான படங்களை வழங்கும் என்று நிறுவனம் கூறுகிறது. மேலும், ஸ்மார்ட் வெர்டிகல் ஆட்டோ கீஸ்டோன் கரெக்ஷன் (smart vertical auto keystone correction) வசதி, எந்த கோணத்தில் வைக்கப்படினும் ஏற்படும் பட சிதைவுகளை தானாகவே சரி செய்துவிடும் என்று போர்ட்ரானிக்ஸ் தெரிவித்துள்ளது. இதில், ஸ்பீக்கர், டெலஸ்கோபிக் ஸ்டாண்டு, USB மற்றும் AUX போர்ட்கள் உள்ளன. போர்ட்ரானிக்ஸ் பீம் 540-ன் விலை இந்தியாவில் ரூ.9,499 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது போர்ட்ரானிக்ஸ் வலைத்தளம், அமேசான், ஃபிளிப்கார்ட் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஃப்லைன் சில்லறை கடைகளில் கிடைக்கும். இந்த ப்ரொஜெக்டருக்கு நிறுவனம் 12 மாத வாரண்டி வழங்குகிறது.போர்ட்ரானிக்ஸ் பீம் 540: சிறப்பம்சங்கள்பிரகாசம்: 4,000 lumens பிரகாசத்தை ஆதரிக்கிறது, இது வெளிச்சமான அறைகளிலும் தெளிவான படங்களை வழங்கும் என்று கூறப்படுகிறது.ப்ரொஜெக்ஷன் தூரம்:2 மீட்டரில் 62-இன்ச் டிஸ்ப்ளே2.5 மீட்டரில் 80-இன்ச் டிஸ்ப்ளே2.8 மீட்டரில் 100-இன்ச் டிஸ்ப்ளேரெசல்யூஷன்: நேட்டிவ் 720p ரெசல்யூஷன் என்றாலும், 4K ரெசல்யூஷனில் கண்டெண்ட்களைப் பார்க்க முடியும் என்று நிறுவனம் கூறுகிறதுOTT செயலிகள்: நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, யூடியூப் போன்ற பிரபலமான OTT செயலிகள் முன்கூட்டியே இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளன.இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 13-இல் இயங்குகிறது. உயரம் மற்றும் சாய்வு சரிசெய்தலுக்காக டெலஸ்கோபிக் ஸ்டாண்டு உள்ளது. மேசை, சுவர் அல்லது கூரையில் பொருத்தும் வசதி உள்ளது. LED லேம்ப் 30,000 மணிநேரம் வரை இயங்கும் என்று கூறப்படுகிறது.கூல்டிங் சிஸ்டம்: dual-turbo cooling system அதிக வெப்பமடைவதைத் தடுக்க தானியங்கி வெப்பநிலை கட்டுப்பாட்டை வழங்குகிறது. ஆட்டோ-ஃபோகஸ் மற்றும் ஸ்மார்ட் வெர்டிகல் ஆட்டோ கீஸ்டோன் கரெக்ஷன் ஆகியவை விரைவான, சிதைவு இல்லாத அமைப்பிற்கு உதவுகின்றனஇணைப்பு: Wi-Fi மற்றும் புளூடூத் இணைப்புடன், HDMI, USB மற்றும் AUX போர்ட்களையும் கொண்டுள்ளது. உள்ளமைந்த 3W ஸ்பீக்கர் உள்ளது, மேலும் வெளிப்புற ஆடியோ சாதனங்களையும் ஆதரிக்கிறது.