இலங்கை
வரிகளைக் குறைத்து ஓகஸ்ட் முதலாம் திகதிக்குள் அமெரிக்காவுடன் ஒப்பந்தம்!

வரிகளைக் குறைத்து ஓகஸ்ட் முதலாம் திகதிக்குள் அமெரிக்காவுடன் ஒப்பந்தம்!
இலங்கை மீது அமெரிக்கா விதித்துள்ள வரிகளைக் குறைத்து,எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதிக்குள் புதிய வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
இலங்கை மீது அமெரிக்கா விதித்துள்ள வரிகளைக் குறைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் பேச்சு நடத்துவதற்காக சிறப்புக் குழுவொன்று ஜூலை மாதம் 18ஆம் திகதியன்று (நாளை) வொஷிங்டனுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. எமது முயற்சிகள் சாதகமாக முடிவடையும் என்ற நம்பிக்கை உள்ளது. அமெரிக்காவுடன் வர்த்தக இணக்கப்பாட்டை எட்டி, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதிக்குள் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட எதிர்பார்த்துள்ளோம் – என்றார்.