இலங்கை

வளங்கள் பகிர்வில் சமச்சீர் பேணுங்கள்; வடக்கு ஆளுநர் அறிவுறுத்து

Published

on

வளங்கள் பகிர்வில் சமச்சீர் பேணுங்கள்; வடக்கு ஆளுநர் அறிவுறுத்து

சில பாடசாலைகளில் வளங்கள் குவிந்துள்ளன. அதற்கு அருகிலுள்ள பாடசாலைகளில் எந்தவொரு வளங்களும் இல்லாமல் காணப்படுகின்றன. எனவே வளங்கள் சமச்சீராக பகிரப்படுவதற்கு வலயக் கல்விப்பணிப்பாளர்களே பொறுப்பு என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை விடுத்துள்ளார்.

இளைஞர் விவகார அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் நேற்று முன்தினம் நடைபெற்றது.

Advertisement

இதன்போது, கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகளில் வடக்கு மாகாணம் தொடர்ந்தும் பின்தங்கியுள்ள நிலைமை தொடர்பில் ஆராயப்பட்டது. கல்விப்பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் முன்னிலையில் இருந்தாலும், சாதாரண தரப்பரீட்சையில் முன்னேற்றத்தைக் காண்பிக்க முடியாமைக்கான காரணங்கள் விரிவாக ஆராயப்பட வேண்டும் என ஆளுநர் குறிப்பிட்டார். அத்துடன் அடுத்த ஆண்டுக்குரிய வேலைத்திட்டங்களை இன்னும் ஒரு மாத காலத்தினுள் வழங்குமாறும் பணிப்புரைவிடுத்தார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version