சினிமா
3 மனைவிகள்…சாவின் விளிம்பில் தத்தளித்த ஜோதிகா பட நடிகர்!! அடுத்தடுத்த சோகங்களால் தவித்த ஹீரோ….

3 மனைவிகள்…சாவின் விளிம்பில் தத்தளித்த ஜோதிகா பட நடிகர்!! அடுத்தடுத்த சோகங்களால் தவித்த ஹீரோ….
முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை ஜோதிகா நடிப்பில் 2001ல் வெளியான படம் லிட்டில் ஜான். இப்படத்தில் ஜோதிகாவிற்கு ஜோடியாக லிட்டில் ஜான் ரோலில் அமெரிக்க நடிகர் பென்ட்லி மிட்சம் நடித்திருந்தார்.தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான இப்படத்தில் இடம்பெற்ற பூவுக்கு பொறந்த நாளு என்ற பாடல் இப்போது வரை பலரால் கொண்டாடப்படும் பாடலாக இருந்து வருகிறது. இப்படத்திற்கு பின் லிட்டில் ஜான் ரோலில் நடித்த பென்ட்லி மிட்சம் வேறு எந்த இந்தியப் படங்களிலும் நடிக்கவில்லை. பாலிவுட் நடிகரான ராபர்ட் கிரிஸ்டோப மிட்சம் தான் இவரின் தந்தை.பென்ட்லியின் சகோதரர் கியான், சகோதரிகள் ஜெனிஃபர், கேரிங் மற்றும் தாத்தா, பாட்டி, மாமா, அத்தை போன்றவர்களும் நடிகர்கள் தானாம். அப்படியான கலைக்குடும்பத்தை சேர்ந்த பென்ட்லி சீரியல்களில் நடித்து 1991ல் பேரோவர்ஸ் என்ற படத்தில் நடித்தார். அதன்பின் லிட்டில் ஜான் படவாய்ப்பு வர அதை ஏற்றுக்கொண்டு நடித்தார்.அதன்பின் நடிப்பில் பெரியளவில் ஆர்வம் காட்டாத பென்ட்லி மிட்சம் வாழ்க்கையில் அடுத்தடுத்த சோகங்கள் ஏற்பட்டுள்ளது. இவருக்கு 3 மனைவிகள்.இதில் முதல் மனைவி Samra Wolfin-யுடன் இருவருக்கு அலெக்ஸேன் என்ற பெண் குழந்தை பிறந்தது. அதன்பின் 1996ல் மனைவியை பிரிந்து 1997ல் நொல்லி பேக்வார் என்பவரை இரண்டாவது திருமணம் செய்தார்.இந்த சூழலில் தான் லிட்டில் ஜான் படத்தில் நடித்து முடித்தார். அதன்பின் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரையும் பிரிந்து, அதே ஆண்டில் ஜெய்ம் அன்ஸ்டெட் என்பவரை மூன்றாவது திருமணம் செய்தார், இவரின் மூலம் கேரிங்டோன் என்ற மகள் பிறந்தார்.மூன்றாவது மனைவியையும் 2014ல் விவாகரத்து செய்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை காலி செய்து வேறொரு நகருக்கு குடிப்பெயர்ந்திருக்கிறார். அங்கே சினிமா பயிற்சிப்பள்ளி ஒன்றை தொடங்கி நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்த அவருக்கு அடுத்தடுத்த பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.2019ல் போனில் மூத்த மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வர, நேரில் பார்த்த அடுத்த வாரத்தில் மகள் இறந்துவிட்டார். காதல் பிரச்சனையில் பென்ட்லியின் மகள் உயிரை இழந்திருக்கிறார். அவரின் வருங்கால கணவன் அவருக்கு விஷம் கொடுத்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.இதனை தொடர்ந்து அடுத்ததாக திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்ட பெண்ணும் அவரை உதறிவிட்டு செல்ல இதுவரை சந்திக்காத சங்கடத்தை பென்ட்லி சந்தித்தார். இந்த விரக்தியில் உயிரை மாய்த்துக்கொள்ள நிலைத்தவர், இசை மீது கவனத்தை திருப்பி, தானே ஆல்பம் எழுதி இசையமித்தும் தற்கொலை எண்ணத்தில் இருந்து மீண்டு வந்திருக்கிறார்.