சினிமா
6 வயசுல எண்ட்ரி..முதல் சம்பளமே ரூ15 லட்சம் வாங்கிய டாப் நடிகை யார் தெரியுமா?

6 வயசுல எண்ட்ரி..முதல் சம்பளமே ரூ15 லட்சம் வாங்கிய டாப் நடிகை யார் தெரியுமா?
சினிமாத்திரையுலகில் பல நட்சத்திரங்கள் குழந்தை நட்சத்திரங்களாக நடிக்க ஆரம்பித்து தற்போது டாப் இடத்தினை பிடித்து கோடியில் சம்பளம் வாங்கி வருகிறார்கள். அந்தவகையில் குட்டி நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்த வாரிசு நடிகை தான் தற்போது பல கோடி சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார்.அவர் வேறுயாருமில்லை, பாலிவுட் சினிமாவில் சென்ஷேஷ்னல் நடிகையான ஆலியா பட் தான். இயக்குநரும் தயாரிப்பாளருமான மகேஷ் பட்டின் மகளாக பாலிவுட்டில் கரண் ஜோகர் படத்தில் அறிமுகமாகினார். ஆலியா பட்டிற்கு முதல் படம் நல்ல நடிகை என்ற பாராட்டை பெற்றுத்தந்தது. 12 ஆம் வகுப்பு முடிக்காமல் சினிமாவில் அறிமுகமாகிய ஆல்யா, பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு நடிப்பின் மீது ஆர்வத்தில் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.சமீபத்தில் ரன்பீர் சிங்கை காதலித்து திருமணம் செய்த ஆலியா பட், ராஹா கபூர் என்ற மகளை பெற்றெடுத்து மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். ஒரு படத்திற்கு 20 முதல் 25 கோடி வரை சம்பளமாக பெறும் ஆல்யா பட், 6 வயதில் குழந்தை நட்ச்த்திரமாக நடித்திருந்தார்.1999ல் சங்கர்ஷ் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஆலியா பட், அப்படத்திற்காக ரூ. 15 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளாராம். தன் கணவர் ரன்பீருடன் இணைந்து மும்பை பந்தரா பகுதியில் ரூ. 250 கோடி மதிப்பிலான பங்களா ஒன்றில் வாழ்ந்து வருகிறார்.ஆலியா பட்டின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 517 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவரது கணவர் ரன்பீர் கபூரின் சொத்து வெறும் ரூ. 203 கோடி தானாம். இருவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 720 கோடி என்று கூறப்படுகிறது.