வணிகம்
9.50% வட்டியில் பெர்சனல் லோன்; பிராஸசிங் ஃபீஸ் கம்மி… ஆச்சரிய சலுகை அறிவித்த இந்த வங்கிகள்!

9.50% வட்டியில் பெர்சனல் லோன்; பிராஸசிங் ஃபீஸ் கம்மி… ஆச்சரிய சலுகை அறிவித்த இந்த வங்கிகள்!
தனிநபர் கடன் (Personal Loan), அவசர காலங்களில் மிகவும் உதவியாக இருக்கும். ஏனெனில், இதற்கு விரைவான ஒப்புதல் கிடைக்கும். மேலும், உங்கள் வசம் இருக்கும் சொத்தை அடமானம் வைக்க தேவையில்லை. உங்கள் இ.எம்.ஐ-களை சரியான நேரத்தில் செலுத்த தவறினால், அது உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கலாம். இது எதிர்காலத்தில் கடன் பெறுவதை கடினமாக்கலாம்.2025 ஆம் ஆண்டிற்கான தனிநபர் கடன் வட்டி விகிதங்களை இந்தியாவின் பல வங்கிகள் சமீபத்தில் மாற்றியுள்ளன. பெரும்பாலான வங்கிகள் ஆண்டுக்கு சுமார் 9.50% முதல் 10.50% வரையிலான வட்டி விகிதங்களை வழங்குகின்றன. இது வாடிக்கையாளரின் கிரெடிட் ஸ்கோர் மற்றும் கடனை திருப்பி செலுத்தும் திறன் ஆகியவற்றை பொறுத்து மாறுபடும்.உதாரணமாக, ஜூலை 13 நிலவரப்படி, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா ஆண்டுக்கு 9.50% வட்டியை வழங்குகிறது. அத்துடன் 1% வரை செயலாக்கக் கட்டணம் (Processing Fee) வசூலிக்கப்படுகிறது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் தனிநபர் கடன் வட்டி விகிதம் ஆண்டுக்கு 10.30% முதல் 15.30% வரை உள்ளது. அதனுடன் 1.5% வரை செயலாக்கக் கட்டணம் வசூலாகும். ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி போன்ற தனியார் வங்கிகள் ஆண்டுக்கு 10.85% முதல் 16.65% வரை வட்டி வசூலிக்கின்றன. அவற்றின் செயலாக்கக் கட்டணம் 2% வரை இருக்கலாம்.நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கூடுதல் கட்டணங்கள்:தனிநபர் கடன் பெறும் போது நீங்கள் செயலாக்கக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும். இது வங்கிக்கு வங்கி மாறுபடும். கடன் தொகையின் 2% முதல் 3.5% வரை இதன் அளவு இருக்கலாம். இந்தக் கட்டணத்திற்கு நீங்கள் ஜி.எஸ்.டி செலுத்த வேண்டியிருக்கும். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி போன்ற சில வங்கிகள் செயலாக்கக் கட்டணமாக 0.5% என்ற குறைந்த கட்டணத்தை வசூலிக்கின்றன. அதே சமயம் இண்டஸ்இண்ட் வங்கி போன்றவை 3.5% அல்லது அதற்கும் அதிகமாக வசூலிக்கலாம்.எனவே, உங்களுடைய நிதி தேவை மற்றும் திருப்பி செலுத்தும் திறன் ஆகியவற்றை பொறுத்து சரியான வங்கியில் இருந்து கடனை பெறலாம்.