இலங்கை
BYOB எனும் பிரசாரத்துடன் காகில்ஸ் ஃபுட் சிட்டி உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னெடுக்கின்றது!

BYOB எனும் பிரசாரத்துடன் காகில்ஸ் ஃபுட் சிட்டி உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னெடுக்கின்றது!
2025 ஆம் ஆண்டு உலக சுற்றுச் சூழல் தினத்தை இட்டு ‘Bring Your Own Bag’ (BYOB)என்ற விசேட முன்னெப்பு மூலமாக காகில்ஸ் ஃபுட் சிட்டி நிலைதன்மை தொடர்பான அதன் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை மீண்டுமொரு முறை உறுதிப்படுத்தியது.
Zero Plastic இயக்கம் மற்றும் லுமாலா நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த பிரச்சாரம் கொள்வனவாளர்கள் தமக்குச் சொந்தமான பைகளைக் கொண்டு வருவதன் மூலம் அல்லது மீண்டும் பயன்படுத்தக்கூடிய Cargills Go Green பையைத் தெரிவு செய்வதன் மூலம் மின்சாரத்தினால் இயங்கும் லுமாலா e-bike ஐ வெல்லும் வாய்ப்பை வழங்கியது
1,000 இற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நோக்கோடு இந்த இயக்கத்தில் ஆர்வத்துடன் இணைந்து கொண்டனர்.
அனைத்து பங்கேற்பாளர்களும் இப்பிரச்சாரத்தின் நெறிமுறைகளுக்கு அமைவான ஒரு நிலைபேறான போக்குவரத்துத் தீர்வான லுமாலா e-bike ஐ வெல்லும் அதிர்ஷ்டக் குலுக்கலில் பங்கேற்றனர்.
மாத்தறை ஹித்தாதியமடவைச் சேர்ந்த திருமதி டி. ஏ. தருஷி செமின் லுமாலா e-bike ஐ வெற்றி கொள்ளும் அதிர்ஷடசாலியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
காகில்ஸ் ஃபுட் சிட்டி பொறுப்புணர்வுடன் நிலைத்தன்மை கொண்ட சில்லறை வணிக நடைமுறைகளை முன்னெடுப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்படுவதோடு ஒரு தடவை மாத்திரம் உபயோகிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டைக் குறைப்பதிலும் உறுதியாகவுள்ளது.
BYOB பிரச்சாரமும் பசுமையான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக காகில்ஸ் ஃபுட் சிட்டி முன்னெடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகளில் ஒன்றாகும்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை