சினிமா
இரண்டு ஹீரோயின்களின் நேரடி மோதல்…! ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் பெரிய படங்கள்!

இரண்டு ஹீரோயின்களின் நேரடி மோதல்…! ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் பெரிய படங்கள்!
பாகுபலி மூலம் மெகா ஹிட் பெற்ற நடிகை அனுஷ்கா ஷெட்டிக்கு, அந்த வெற்றிக்குப் பிறகு சில உடல் பருமன் காரணமாக சினிமா வாய்ப்புகள் குறைந்து விட்டன. இஞ்சி இடுப்பழகி படத்திற்காக எடையை கூட்டியதிலிருந்து, மீண்டும் பழைய உடலமைப்புக்கு திரும்புவதில் சிரமப்பட்டு வந்தார். இதனால் சில ஆண்டுகளாக திரையுலகில் இருந்து தூரமாக இருந்த அவர், இப்போது காதி என்ற புதிய படத்தின் மூலம் மீண்டும் கம்பேக் செய்யத் தயாராகிறார்.காதி படத்தை பிரபல இயக்குநர் கிரிஷ் ஜாகர்லாமுடி இயக்குகிறார். இப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. அதே நாளில் ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கும் தி கேர்ள் ஃப்ரெண்ட் படமும் வெளியாகிறது. ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில், ராஷ்மிகா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்த இரண்டு படங்களும் கதாநாயகியை மையமாகக் கொண்ட கதைகளாக உருவாகியுள்ளன. அதிலும் சமீபகாலமாக ராஷ்மிகாவின் படங்கள் சிறந்த வரவேற்பைப் பெற்று வருவதால், தி கேர்ள் ஃப்ரெண்ட் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. முதல் பாடலே பெரும் ஹிட்டாகி இருக்கிறது. இரு நடிகைகளுக்கும் இது முக்கியமான படம். ரசிகர்கள், “யார் வெற்றி பெறுவார்கள்?” என்ற ஆவலுடன் உள்ளனர். அனுஷ்காவுக்கோ இது ஒரு பெரிய கம்பேக் வாய்ப்பு என்பதால், செப்டம்பர் 5க்கு திரையரங்குகள் மோதலுக்கான மேடையாக மாறவிருக்கிறது.