பொழுதுபோக்கு
அய்யோ…சாமி ஒன்னே போதும்; இனி எந்த ஜென்மத்திலும் கல்யாணம் வேணாம்; விரக்தியில் பேசிய பிரபல நடிகை!

அய்யோ…சாமி ஒன்னே போதும்; இனி எந்த ஜென்மத்திலும் கல்யாணம் வேணாம்; விரக்தியில் பேசிய பிரபல நடிகை!
திரையில் நாம் பார்க்கும் சினிமா நட்சத்திரங்களின் தனிப்பட்ட வாழ்க்கை, நிஜத்திலும் அதே போன்று ஜொலிப்பதில்லை. இதற்கு சார்லி சாப்ளின் தொடங்கி சம கால கலைஞர்கள் வரை பலரை உதாரணமாக கூறலாம். மனம் முழுவதும் பல சோகங்களையும், துக்கங்களை அடக்கி வைத்துக் கொண்டு, திரையில் மக்களை மகிழ்விக்கும் பணியை அவர்கள் செய்கின்றனர்.இதற்கு நடிகை பிரியங்காவின் வாழ்க்கையும் விதிவிலக்கல்ல. சினிமாவில் நகைச்சுவை ஜாம்பவான்களான விவேக், வடிவேலு தொடங்கி பலருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் பிரியங்காவிற்கு இருக்கிறது. இவர் பெரும்பாலும் நகைச்சுவை பாத்திரங்களை ஏற்று நடித்திருந்தாலும், குணச்சத்திர வேடங்களையும் திறம்பட செய்யக் கூடியவர். ‘மருதமலை’, ‘வில்லன்’ போன்ற பல படங்களில் நம்மை சிரிக்க வைத்துள்ளார். இந்நிலையில், தனது திருமணம் வாழ்வில் ஏற்பட்ட பிரச்சனைகளை கலாட்டா தமிழ் யூடியூப் சேனலுடனான நேர்காணலின் போது அவர் மனம் திறந்து கூறியுள்ளார்.அதன்படி, “திருமண வாழ்க்கை எதிர்பார்த்தபடி சரியாக அமையாத காரணத்தினால் பல பிரச்சனைகள் இருந்தது. ஆனால், எனது குடும்பத்தினர் பக்கபலமாக இருந்தனர். தவறான ஒரு உறவில் இருந்து கஷ்டப்படுவதை விட, அதில் இருந்து விலகி வருவது சிறப்பான முடிவு. இதன் மூலம் பல பிரச்சனைகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும்.எனது முன்னாள் கணவருக்கு இப்போது இரண்டாவது திருமணம் ஆகி விட்டது. என்னையும் மறுமணம் செய்து கொள்ள சிலர் அறிவுறுத்தினர். ஆனால், எனக்கு விருப்பம் இல்லை. ஒரு முறை திருமணம் செய்த போது பல பிரச்சனைகளை பார்த்து விட்டேன். இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எனக்கு திருமணம் வேண்டாம். மேலும், எனது குடும்பத்தினரும் அடுத்ததாக திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தவில்லை. அதிலும், ரிதன்யாவின் சம்பவத்தை பார்த்த பின்னர், மிகுந்த வேதனை கொண்டேன். திருமண வாழ்வில் கஷ்டப்படுபவர்களை, சகித்துக் கொண்டு இருக்குமாறு கூறக் கூடாது. அதுவே, தவறான முடிவுகளுக்கு வழிவகுக்கும்” என்று நடிகை பிரியங்கா தெரிவித்துள்ளார். இதன் மூலம் சினிமா பிரபலங்களின் வாழ்விலும் சாமானிய மக்களை போலவே நிறைய சோகங்கள் மறைந்திருக்கின்றன என்று நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது.