பொழுதுபோக்கு
உனக்கு பாட்டு வராதுல்ல, வெளியில போ… துரத்திய இயக்குனரை பழிவாங்கிய நாகேஷ்; வாலி சொன்ன ரகசியம்!

உனக்கு பாட்டு வராதுல்ல, வெளியில போ… துரத்திய இயக்குனரை பழிவாங்கிய நாகேஷ்; வாலி சொன்ன ரகசியம்!
வாலி பாடல் எழுத வாய்ப்பு தேடி அலைந்துகொண்டிருந்த போது அவருடன் ஒரு கம்பெனிக்கு சென்ற, நாகேஷை பிரபல இயக்குனர் ஒருவர் வெளியில் போ என்று சொல்ல, பின்னாளில் தனது கால்ஷீட் கேட்டு அந்த இயக்குனரை தன் பின்னால் அலையவிட்டர் நாகேஷ் என்று வாலி கூறியுள்ளார்.தமிழ் சினிமாவில் தனது வாழ்நாளின் கடைசி வரை வாலிப கவிஞர் என்று போற்றப்பட்டவர் தான் வாலி. எம.ஜி.ஆர் சிவாஜி தொடங்கி, ரஜினி கமல், விஜயகாந்த், சூர்யா சிம்பு வரை 5 தலைமுறை நடிகர்களுக்கு தனது வரிகள் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்த வாலி, கவியரசர் கண்ணதாசன் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் அவருக்கு போட்டியாக வந்தவர்.இருவருக்கும் இடையில் போட்டி இருந்தாலும், தனிப்பட்ட முறையில் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்துள்ளனர். சினிமாவில் பாடல் எழுத வேண்டும் என்ற ஆசையுடன் சென்னை வந்த வாலி, ஒருமுறை தனது நண்பர் நடித்த தாமரைக்குளம் படத்தின் ஷூட்டிங்கை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது வாலியின் நண்பன் கோபி அந்த படத்தின் நாயகனாக நடித்திருந்தார்.வாலி படப்பிடிப்பு தளத்திற்கு வந்தபோது, அவருக்கு ஒரு நடிகைரை கோபி அறிமுகம் செய்து வைத்துள்ளார். இவருக்கு இதுதான் 2-வது படம் பேர் குண்டுராவ் என்று கூறியுள்ளார். அவரை பார்த்த வாலி, இந்த உடலை வைத்துக்கொண்டு உங்களுக்கு நடிப்பு ஆசை வந்ததே தப்பு என்று கூறியுள்ளார். இதை கேட்ட குண்டுராவ், நீங்கள் கூட தான் சினிமாவில் பாடல் எழுத வந்திருக்கிறீங்க, எந்த நம்பிக்கையில் வந்தீங்க, நீங்கள் என்ன பெரிய புலவரா என்று கேட்டுள்ளார்.இப்படி தொடக்கத்தில் மோதலாக தொடங்கிய இவர்களின் சந்திப்பு நாளடைவில் பிரிக்க முடியாத நட்பாக மாறியது. அந்த புதுமுக நடிகர் குண்டுராவ் தான் காமெடி நடிகர் நாகேஷ். அதன்பிறகு இருவரும் ஒரே அறையில் தங்கும் சூழல் ஏற்பட்ட நிலையில், இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறியுள்ளனர். அந்த சமயத்தில் பாட்டு எழுதுடா என்று சொல்லி நாகேஷ் பேப்பர் பால் எல்லாம் வாங்கி வந்து வாலியிடம் கொடுத்துள்ளார். ஆனால் வாலி பாலை குடித்துவிட்டு தூங்கிவிடுவாராம்.பழம்பெரும் நடிகராக ஸ்ரீகாந்த் அமெரிக்கன் எம்.பெசியில் வேலை பார்த்து அவரது தயவில் இவர்கள் சாப்பிட்டுக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது ஒருநாள், அரசு பிச்சர்ஸ் பா.நீலகண்டன் ஒரு படம் எடுக்கிறார். பாடல் எழுத உங்களை அழைத்து வர சொன்னார் என்று சொல்ல, அந்த ஆபீஸ் எங்க இருக்குனே எனக்கு தெரியாது என்று வாலி கூறியுள்ளார். நாகேஷ் நான் அழைத்து போகிறேன் என்று வாலியை அந்த ஆபீஸ்க்கு அழைத்து சென்றுள்ளார். அங்கே அறிஞர் அண்ணாவும் இருந்துள்ளார்.அப்போது பா.நீலகண்டன், உங்களில் யார் வாலி என்று கேட்க, வாலி நான் தான் என்று கூறியுள்ளார். அதன்பிறகு நாகேஷை பார்த்து இவர் யார் என்று கேட்க, என ப்ரண்டு ரூம்மெட், தாமரைக்குள் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார் என்று கூறியுள்ளார். நீ பாட்டு எழுத மாட்டேல்ல அப்போ வெளியில போ என்று பா.நீலகண்டன் நாகேஷை பார்த்து கூறியுள்ளார். இதே பா.நீலகண்டன் பின்னாளில் நாகேஷின் கால்ஷீட்டுக்காக அவரது பின்னால்’ அலைந்துள்ளார். நாகேஷ் சிரித்துக்கொண்டே அவரை பழிவாங்கிவட்டான் என்று வாலி கூறியுள்ளார்.