இலங்கை
கரைச்சி பிரதேச சபையின் இரண்டாவது சபை அமர்வில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்.

கரைச்சி பிரதேச சபையின் இரண்டாவது சபை அமர்வில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்.
கிளிநொச்சிகரைச்சிபிரதேச சபையின் இரண்டாவது சபை அமர்வு இன்றுநடைபெற்றது.
தவிசாளர் அறிவித்தல்.
1) சந்தைகளில் விவசாய உற்பத்திகளுக்கான 10 : 1 என்ற கழிவு நிர்ணயம் 1/8/ 2025 முதல் நீக்கம். (மரவள்ளி கிழங்கு தவிர்ந்தவை)
2) தந்தை செல்வாவின் சிலை அமைத்தல்.
3) வள்ளுவர் சிலை அழகுபடுத்தல், மக்கள் பார்வைக்கு ஏற்ற வகையில் முன்பகுதி சீர்ப்படுத்தல்.
4) தாவரவியல் பூங்காவிற்கு அபி விருத்தி குழு அமைத்தல்.
5) கிளிநொச்சி நூலக அபிவிருத்தி குழு அமைத்தல்.
6) உணவு விற்பனை நிலையங்களை சுகாதார நடைமுறைக்கு ஏற்ப தரப்படுத்தல்.
7) சிறியரக மோட்டார் வாகனங்கள் மற்றும் கார் என்பவற்றிற்கான தரிப்பிடங்கள் வரத்தமானிப்படுத்தல்.
8)கல்மடுக் குள பகுதியில் குவிக்கப்பட்டுள்ள ஏறக்குறைய 2300 கியூப் மணல் வீட்டுத்திட்ட பயனாளிற்க்கு விற்பனை செய்தல்.
9) மணல் விற்பனை வருமானங்களை அப்பகுதி வட்டார அபிவிருத்திக்கு பயன்படுத்துதல்.
பிரேரணைகள்.
—
திரு மு. சிவமோகன் பி.உ
1) மயானம் அமைத்தல் :- இராமநாதபுரம் புல்லுக்குளம் பகுதியில் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்களின் பயன்பாட்டுக்குரிய முறையில்.
கல்மடுநகர்,புன்னைநீராவி,ஆனைவிழுந்தான் பகுதிகளிலும் புதிய மயானங்கள் அமைக்க ஏகமனதாக தீர்மானங்கள் எடுக்கப்பட்டு தொடர் நடவடிக்கை மேற் கொள்வதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
2) ஆயுள் வேத மருத்துவமனை அமைத்தல்.
பாரதிபுரம்,மலையாளபுரம், பொன்னகர், விவேகானந்த நகர் பகுதி மக்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் ஆயுள் வேத மருத்துவமனை அமைப்பதற்கு சபை ஏகமனதாக ஏற்றுக்கொண்டு பொருத்தமான இடம், நிதி ஒதுக்கம் மேற்கொள்வது எனவும் 2026 இல் நடைமுறைப்படுத்துவதுடன் தற்காலிகமாக வைத்தியசாலையை 1/01/ 2026 இல் நடாத்துவது எனவும்
2) ஆயுள் வேத மருத்துவமனை அமைத்தல்.
பாரதிபுரம்,மலையாளபுரம், பொன்னகர், விவேகானந்த நகர் பகுதி மக்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் ஆயுள் வேத மருத்துவமனை அமைப்பதற்கு சபை ஏகமனதாக ஏற்றுக்கொண்டு பொருத்தமான இடம், நிதி ஒதுக்கம் மேற்கொள்வது எனவும் 2026 இல் நடைமுறைப்படுத்துவதுடன் தற்காலிகமாக வைத்தியசாலையை
1/01/ 2026 இல் நடாத்துவது எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
திரு பிரான்சிஸ் அன்ரனி லூக்காஸ் பி.உ
3) கனியவள முகாமைத்துவ மேலாண்மை.
மணல்,கிறவல் ,கல் போன்ற கனிய வளங்கள் எமது உள்ளூர் ஆட்சி அதிகாரங்களுக்கு அப்பாற்பட்டது. ஆயினும் மாவட்டத்தின் துறை சார் திணைக்களங்களின் அனுசரணையோடு முகாமை செய்வதற்கான முறையில் பிரேரணை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
திரு அ. வேழமாலிகிதன் தவிசாளர்
4) கிளிநொச்சி பொதுச் சந்தை வர்த்தகத் தொகுதி நிர்மாணமும்,நிதி விடுவித்தலிற்கான அனுமதியும்.
சபை நிதியில் இருந்து 120 மில்லியன் ரூபாய்களை விடுவித்து கடைத்தொகுதி அமைப்பது என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
5) கிளிநொச்சி பொதுமயான மின் மயானம் பொறித் தொகுதி பொருத்தலும், நிதி விடுவித்தலும்.
சபை நிதியிலிருந்து 15 மில்லியன் ரூபா விடுவித்து பொறித் தொகுதி பொருத்தி பயன்பாட்டிற்கு விடுவது என சபை ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
6) கிளிநொச்சி பசுமை பூங்கா சந்திரன் பசுமை பூங்கா என பெயர் மாற்றம் செய்தலும் அபிவிருத்தி செய்தலும்.
பெயர் மாற்றத்தை சபை ஏகமானதாக ஏற்றுக் கொண்டதுடன் சந்திரன் பூங்காவின் இரண்டாவது பகுதியாக உள்ள உயிரியல் பூங்காவையும்
இராணுவத்திடம் இருந்து விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஏகமனதாகா முடிவு செய்யப்பட்டது.
7) முரசு மோட்டை உப அலுவலக நிர்மாணமும், நிதி விடுவித்தலும்.
சபை நிதியிலிருந்து 18 மில்லியன் ரூபா விடுவித்து அபிவிருத்தி செய்வது என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. மேலும் பல விடயங்கள் ஆராயப்பட்டு மாலை 5 மணி அளவில் சபை நிறைவுற்றது . தீர்மானம் எடுக்கப்பட்டது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை