பொழுதுபோக்கு
சுத்தமா காசு இல்ல… இந்த ட்ரெய்ன விட்டா போச்சு; பணம் இல்லாமல் தவித்த தருமணம்: சந்தோஷ் நாராயணன் ஓபன் டாக்!

சுத்தமா காசு இல்ல… இந்த ட்ரெய்ன விட்டா போச்சு; பணம் இல்லாமல் தவித்த தருமணம்: சந்தோஷ் நாராயணன் ஓபன் டாக்!
தற்போது மிகப்பெரிய இசையமைப்பாளராக இருந்தாலும், ஒரு காலத்தில், ஒரு ட்ரெயின் வரவில்லை என்றால் எனது நிலைமை மோசமாகி இருக்கும் என்ற நிலை தான் இருந்தது. அப்போது என் மீனாட்சி தான் என்னை கைகொடுத்து தேற்றினார் என்று இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கூறியுள்ளார். பா.ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான படம் அட்டக்கத்தி. இந்த படத்தின் மூலம் பா.ரஞ்சித் இயக்குனராக அறிமுகமான நிலையில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருந்தார். இந்த படத்தின் பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து, பீட்சா, சூது கவ்வும் என தொடர் வெற்றிப்படங்களுக்கு இசையமைத்திருந்த சந்தோஷ் நாராயணன், கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 2-வது படமாக ஜிகர்தண்டா படத்திற்கும் இசை அமைத்திருந்தார்.கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பீட்சா, ஜிகர்தண்டா ஆகிய இரு படங்களுமே பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தது. அதன்பிறகு பா.ரஞ்சித்தின் மெட்ராஸ், கபாலி, காலா, இறுதிச்சுற்று, பைரவா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களுக்கு இசைமைத்திருந்தார். தமிழ் மட்டும் இல்லாமல், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களுக்கும் இசையமைத்துள்ளார். அந்த வகையில், கடந்த ஆண்டு வெளியான மிகப்பெரிய பட்ஜெட் படமாக கல்கி படத்திற்கும் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்தார்.அந்த வகையில் தற்போது விஜய் சேதுபதி நடித்துளள தலைவன் தலைவி படத்திற்கு இசையமைத்துள்ளார். பீட்சா, சூது கவ்வும், காதலும் கடந்து போகும், இறைவி, கடைசி விவசாயி உள்ளிட்ட படங்களை தொடர்ந்து, 6-வது முறையாக விஜய் சேதுபதி சந்தோஷ் நாராயணன் கூட்டணி இணைந்துளள்ளது. இந்த படத்தின் என்னடி சித்திரமே பாடல், தற்போது இளைஞர்கள் மத்தியில் வைரலாக பரவி வரும் நிலையில், பலரின் ரிங்டோனாக மாறியுள்ளது. இதனிடையே, சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சந்தோஷ் நாராயணன் உருக்கமாக பேசியுள்ளார்.அதில், 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை என் கையில் இருந்தது என்றால், உடனயாடியாக விமானத்தை பிடித்து மீனாட்சியை பார்க்க சென்றுவிடுவேன். அங்குதான் தொடங்கியது எனது காதல். எப்போவது இபிக்காக, ரெண்ட் கொடுப்பதற்க்காக ப்ராஜக்ட் பண்ணுவோம். அந்த மாதிரி, ஆஸ்திரேலியா போவதற்காக, ஒரு ப்ராஜக்ட் பண்ணுவோம். அதற்காக ரூ18 ஆயிரம் ஆகும். குறைந்தபட்சம் அவ்வளவு தொகை இருக்க வேண்டும். இங்கிருந்து வெறும் கையுடன்போய், அப்படியே திரும்பி வர வேண்டியதான்.அங்கிருக்கும்போது 50 டாலர் இல்லை என்றால் திரும்பி வர முடியாது. பெரிய பிரச்னை ஆகிவிடும். கைது செய்துவிடுவார்கள். எதாவது செய்துவிடுவார்கள் என்ற பயம இருக்கும். அப்படி ஒருநாள் நான் எதிர்பார்த்த ட்ரெய்ன் வரவில்லை. அந்த ட்ரெய்ன் வரவில்லை என்றால் அடுத்த ட்ரெயினை பிடித்த போக எங்கள் இருவரிடமும் பணம் இல்லை. எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அப்போது பரவாயில்லை எப்படியாவது நாம ஜெயித்துவிடுவோம் என்று மீனாட்சி சொன்னார்.அந்த நிலைமை எப்போவும் என் ஞாபகத்தில் இருந்துகொண்டே இருக்கும். இப்போ எங்களுக்கு இவ்வளவு ரிசோர்ஸ் இருக்கு அதற்கெல்லாம் காரணம் எங்க அம்மா, அப்பா, என் கூட இருந்தவர்கள் மீனாட்சி எல்லாரும் தான் காரணம் என்று உருக்கமாக பேசியுள்ளார்.