Connect with us

பொழுதுபோக்கு

தனி மனித ஒழுக்கம் இல்ல, அப்புறம் என்ன தலைவர்? விஜய் பற்றி விளாசிய பிரபலம்!

Published

on

Advocate Geetha

Loading

தனி மனித ஒழுக்கம் இல்ல, அப்புறம் என்ன தலைவர்? விஜய் பற்றி விளாசிய பிரபலம்!

சினிமா துறையில் பெற்ற புகழை மூலதனமாக கொண்டு அரசியலில் பலர் ஈடுபட்டார்கள். உலக அளவில் இதற்கு பலரை எடுத்துக்காட்டாக கூற முடியும். தமிழ்நாட்டை பொறுத்த வரை ஒவ்வொரு காலகட்டத்தை சேர்ந்த சினிமா பிரபலங்கள் பலர், அரசியலில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இவர்களில் சிலரே மக்கள் ஆதரவு பெற்று உயர் பதவிகளை அடைந்தனர்.அந்த வகையில், தமிழ் சினிமாவில் பல ப்ளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்து வெற்றிகரமான ஹீரோ என்ற அந்தஸ்து கொண்ட நடிகர் விஜய்யும், அரசியலில் களம் இறங்கியுள்ளார். ஆனால், சினிமாவில் இருந்து முற்றிலும் விலகி, முழு நேர அரசியலில் ஈடுபடப்போவதாக விஜய் அறிவித்தார். இதற்கு சிலர் ஆதரவு தெரிவித்தாலும், பல தரப்பில் இருந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக, சில விமர்சனங்கள் தனி மனித தாக்குதலாகவும் மாறின.இந்த சூழலில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நண்பரும், வழக்கறிஞருமான கீதா என்பவர் விஜய் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காண்லில் தனது கருத்துகளை அவர் பகிர்ந்து கொண்டார். அதன்படி, “மிகுந்த திமிரான மனோபாவத்துடன் விஜய் நடந்து கொள்கிறார். தன்னுடைய குடும்பத்தினர் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருவதை கூட பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், அதற்கு எந்த வித எதிர்வினையும் ஆற்றாமல் விஜய் செயல்படுகிறார்.தனது குடும்பத்தை விட்டு, த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் மீது விஜய் கவனம் செலுத்தி வருகிறார். விஜய் நடத்தும் பார்ட்டிகளின் வீடியோக்கள் பலரிடம் இருக்கிறது. கட்சி மாநாடு நடந்த போது கூட, கேரவனில் நடிகைகளுடன் ஆட்டம் போட்டவர் தான் விஜய்.இந்த விஷயங்கள் அனைத்தும் எல்லோருக்கும் தெரியும். அப்படி இருந்தும் இது குறித்து கண்டுகொள்ளாமல் விஜய் நடந்து கொள்கிறார். மக்களின் கருத்துகள் குறித்து விஜய்க்கு கவலை இல்லை. சினிமாவில் புகழுடன் இருப்பதால் மக்கள் வாக்களிப்பார்கள் என்ற எண்ணத்தில் விஜய் இருக்கிறார்.இப்படிப்பட்ட அயோக்கியர்களை தேர்ந்தெடுத்தால் மக்கள் தான் முட்டாள். தனி மனித ஒழுக்கம் இல்லாதவர்களை தலைவர்களாக ஏற்றுக் கொள்வது தவறு. விஜய்யின் இந்த செயல்கள் குறித்து கிராமப்புற மக்களுக்கு கூட தெரிகிறது. ஆனால், மக்கள் மீது மரியாதை இல்லாமல் இப்படி செயல்படுகிறார்.தன் மீது இத்தனை விமர்சனங்கள் சுமத்தப்படும் போது, ஒரு குற்றச்சாட்டுக்காவது விஜய் மறுப்பு தெரிவித்துள்ளாரா? விஜய்யின் அனுமதி இல்லாமல், அவரது அப்பா கூட அவரை சந்திக்க முடியாத நிலை தான் இருக்கிறது. கட்சியின் முதல் மாநாட்டில் தனது அம்மா, அப்பாவை விஜய் அழைத்தது டிராமா தான்.இந்த மரியாதையை வீட்டிலேயே விஜய் கொடுக்கலாம். நாட்டையும், மக்களையும் ஒரு பகடைக் காயாக பயன்படுத்துவதற்காகவே விஜய் அரசியலில் களமிறங்கியுள்ளார். அரசியலை தமாஷாக பார்க்கின்றனர்” என்று வழக்கறிஞர் கீதா தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன