இலங்கை
நாடு முழுவதும் இராணுவ அதிகாரிகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரே நாளில் கைது

நாடு முழுவதும் இராணுவ அதிகாரிகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரே நாளில் கைது
நாடு முழுவதும் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 1,461 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரன்மல் கொடிதுவக்குவின் வழிகாட்டுதலின் கீழ், 14,000க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினரைக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, 46 வாகனங்கள் மற்றும் 51 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நடவடிக்கையில், குற்றங்களில் நேரடியாக பங்கேற்ற 107 நபர்களும், இராணுவத்தில் இருந்து தப்பியோடிய 7 நபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், ஹெரோயின், ஐஸ், கஞ்சா மற்றும் சட்டவிரோத மதுபானங்கள் உள்ளிட்ட பொருட்களும் இந்தச் சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.