Connect with us

சினிமா

பிக்பாஸ் முதல் வெள்ளித்திரை வரை…!ரசிகர்களை கவரும் ஜனனியின் நேர்காணல்…!

Published

on

Loading

பிக்பாஸ் முதல் வெள்ளித்திரை வரை…!ரசிகர்களை கவரும் ஜனனியின் நேர்காணல்…!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளரும், இலங்கை தமிழருமான ஜனனி குணசீலன், தனது வாழ்க்கைப் பயணம் மற்றும் தமிழ் திரைத்துறையில் ஏற்பட்ட அனுபவங்களை நேர்காணலில் பகிர்ந்துள்ளார். “நான் பிக்பாஸ்-க்கு காஸ்டிங் கூட போகவில்லை. ஒரு நாள் எனக்கு நேரடியாக பிக்பாஸ் டீம்-ல இருந்து ஒரு கால் வந்தது. முதலில் யாரோ கால்பண்ணி கிண்டல் பண்ணறாங்கனு நினைச்சேன்,” என்று ஜனனி சிரித்தவாறு கூறினார்.பிக்பாஸ் வீட்டில் மெதுவாக பேசும், அமைதியான பெண்ணாக  அறிமுகமான ஜனனி, தன் ஆரம்பக் கட்ட அனுபவங்களைத் திறந்த மனதுடன் பகிர்ந்தார். “அந்த கால் வந்தப்போ என்ன பேசணும்னு தெரியாம வாயைத் திறக்காம இருந்தேன். பிறகு, எனக்கு டீம்-ல பேச சொல்லி, ஒரு voice note அனுப்ப சொன்னாங்க.”தமிழ் வட்டாரச்சொற்கள் மற்றும் உரையாடல் முறையைப் புரிந்து கொள்வது ஆரம்பத்தில் சிரமம் கொடுத்ததாக அவர் சொன்னார். “Script-ஐ குடுத்தாங்க, ஆனா புரியலை. எல்லாத்தையும் பதிவு பண்ணிட்டு, நிதானமா படிக்க ஆரம்பிச்சேன்.”அவருடைய உச்சரிப்பு காரணமாக பலர் கேரளாவிலிருந்து வந்ததா? என கேட்பதாகவும், “நான் எப்போதுமே சொல்லுவேன் – நான்  இலங்கை தான் என்று கூறியதுடன்  சில பேருக்கு என் மொழி மாறுபாட்டால்  தோணும்  எனக்  கூறினார். சாப்பாடு குறித்தும் பேசும் அவர் தனது நாட்டுப்பற்றை வெளிப்படுத்தினார். “எனக்குப் பிடித்தது கொத்து ரொட்டி, புட்டு – கடலைக் கறி . இப்போவும் சென்னைல இருக்கும் போது Swiggy, Zomato தேடிப் பார்ப்பேன்.”மேலும் கூறும் போது பிக்பாஸ் முடிந்த பிறகு என்ன செய்வது என்ற குழப்பம் இருந்ததாகவும், அதற்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மூலம் ஒரு திரைப்பட வாய்ப்பு கிடைத்ததாகவும் அவர் கூறினார். “அவரை நேரில் சந்திக்கும்போதும் நம்பவே முடியல. இப்படி ஒரு வாய்ப்பு என் பக்கத்துக்கு வரும்னு எதிர்பார்க்கல.”என்று கூறினார்.  தமிழ் சினிமாயில் ஒளிப்பதிவு மட்டும் இல்லாமல், டப்பிங் கடினம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். “நான் தமிழ் பேசறேன், ஆனா சினிமாவில் வரும் slang, pronunciation கொஞ்சம் வேற மாதிரி. எனக்கு அது full-a adjust ஆகவே சில நேரம் கஷ்டம்.” என்று கூறிய விடயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன