இலங்கை
விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் போதைப்பொருட்களுடன் 3,283 பேர் கைது!

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் போதைப்பொருட்களுடன் 3,283 பேர் கைது!
நாடளாவிய ரீதியில் ஜூலை மாதம் 11 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 3,283 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 1006 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 1129 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 1039 பேரும், ஹேஷ் போதைப்பொருளுடன் 18 பேரும், கஞ்சா செடிகளுடன் 24 பேரும், போதை மாத்திரைகளுடன் 59 பேரும், சட்டவிரோத சிகரட்டுகளுடன் 08 பேரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 01 கிலோ 733 கிராம் 174 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 02 கிலோ 375 கிராம் 756 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 24 கிலோ 111 கிராம் 5753 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளும், 19 கிராம் 615 மில்லி கிராம் ஹேஷ் போதைப்பொருளும், 2464 போதை மாத்திரைகளும், 84 சட்டவிரோத சிகரட்டுகளும், 5923 கஞ்சா செடிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.