இலங்கை
விசேட தேவையுடையோருக்கு கனடாவின் புதிய வேலைத்திட்டம்!

விசேட தேவையுடையோருக்கு கனடாவின் புதிய வேலைத்திட்டம்!
கொட்டகலை பொது சுகாதார காரியாலயத்தின் ஏற்பாட்டில் கொட்டகலை பிரதேச பகுதியில் உள்ள விசேட தேவையுடைய குழந்தைகளுக்கான புதிய வேலைத்திட்டம் (17.07.2025) கொட்டகலை ரிசி கேசி கலாசார மண்டபத்தில் இடம் பெற்றது.
இந்த வேலைத்திட்டத்திற்கு கனடா நாட்டின் AUTISM SPEAKS நிறுவனத்தின் ஊடாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கொட்டகலை பிரதேசத்தில் உள்ள விசேட தேவையுடையவர்களை எவ்வாறு பாதுகாப்பது தொடர்பாக பொது சுகாதார காரியாலயத்தின் உத்தியோகத்தர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
அதேவேளை இன்று இடம்பெற்ற தெழிவூட்டல் நிகழ்வில் விசேட தேவையுடைய சிறுவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.