இலங்கை
5 இலட்சம் ரூபா பணத்தை திருடிய வவுனியா பல்கலை மாணவன்

5 இலட்சம் ரூபா பணத்தை திருடிய வவுனியா பல்கலை மாணவன்
இணையவழி ஊடாக வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி 5 இலட்சம் ரூபா பணத்தை திருடிய பல்கலை மாணவன் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று (17) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் ருஹுனு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட பல்கலை மாணவன் வவுனியா – புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் ஆவார்.
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பல்கலை மாணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட பல்கலை மாணவனை நீதிமன்றஙில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.