சினிமா
அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் AK64…!அதிகாரபூர்வமாக அறிவித்த படக்குழு..!

அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் AK64…!அதிகாரபூர்வமாக அறிவித்த படக்குழு..!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தல அஜித், அவரது பல்துறை திறமைகளால் ரசிகர்களிடையே தனி இடம் பிடித்துள்ளார். வெறும் நடிகராக இல்லாமல், பைக் ரேஸ் , கார் ரேஸ் , டெக்னிக்கல் ஆர்வம் எனப் பல வலைத்தளங்களில் தனது திறமையை நிரூபித்துள்ளார்.2025-இல் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படம், எதிர்பார்ப்புகளை ஏமாற்றியதாக இருந்தாலும், அதனைத் தொடர்ந்து வந்த குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. இந்த வெற்றிக்குப் பின், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் தல அஜித் மீண்டும் இணைகிறார் என்ற தகவல் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது.தற்போது, இந்த தகவலை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் கூறியதாவது: “அஜித் குமார் சாரின் AK64 திரைப்படத்தை நான்தான் இயக்குகிறேன். குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து மீண்டும் அவருடன் பணியாற்றுவது எனக்கு பெரும் சந்தோஷம். இந்த படம் ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை தரும் என உறுதி கூறுகிறேன்.” இதனுடன், AK64 படம் குட் பேட் அக்லியை விட முற்றிலும் மாறுபட்டதாகவும், ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக இருப்பதாகவும் ஆதிக் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால், தல ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.