பொழுதுபோக்கு
அவ்வை சண்முகி படத்தில் கமல் மகள்; இப்போ எப்படி இருக்கார் பாருங்க: இவ்வளவு வளந்துட்டாரே!

அவ்வை சண்முகி படத்தில் கமல் மகள்; இப்போ எப்படி இருக்கார் பாருங்க: இவ்வளவு வளந்துட்டாரே!
சினிமாவில் ஒவ்வொரு ஆண்டும் புதுமுக நடிகர் நடிகைள் வரவு அதிகரித்து வருகிறது. அதே சமயம் குழந்தை நடிகர்களில் வரவும் அதிகமாகத்தான் உள்ளது. இப்போது சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் குழந்தை நட்சத்திரங்கள் நேரடியாக சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டனர். ஆனால், சமூகவலைதளங்களில் இல்லாத காலக்கட்டத்தில், பல குழந்தை நட்சத்திரங்கள் தமிழ் சினிமாவை ஆட்சி செய்துள்ளனர்.அந்த வகையிலான ஒரு குழந்தை நட்சத்திரம் தான் பேபி ஆனி(அன் அலெக்சியா). இவர் எந்த படததில் நடித்துள்ளார் என்று கேட்கிறீர்களா, கமல்ஹாசன் மீனா நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான அவ்வை சண்முகி திரைப்படத்தில் கமல்ஹாசனின் மகளாக இவர் தான் நடித்திருப்பார். தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்களின் இயக்குனர் என்று பெயரேடுத்த கே.எஸ்.ரவிக்குமார், முதல்முறையாக கமல்ஹாசனுடன் இணைந்த படம் தான் அவ்வை சண்முகி.ஜெமினி கணேசன் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படத்தில், ஹீரா ராஜகோபால், டெல்லி கணேஷ், நாசர், மணிவண்ணன், பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தேவா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். குழந்தையுடன் பிரிந்து சென்ற மனைவியை சமாதானப்படுத்த, அவரது வீட்டிலேயே பெண் வேடம்போட்டுக்கொண்டு வேலை செய்யும் கேரக்டரில் கமல்ஹாசன் சிறப்பாக நடித்து அசத்தியிருப்பார். படமும் பெரிய ஹிட் படமாக அமைந்தது,இந்த படத்தில் மீனா வீட்டில் கமல்ஹாசன் பெண் வேடத்தில் முதன் முதலில் வரும்போதே அவரது மகள் கண்டுபிடித்துவிடுவார். கமல்ஹாசன் மகளான நடித்த பேபி ஆனிக்கும் (அன் அலெக்சியா) கமல்ஹாசனுக்கும் இடையேயான காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக, வீட்டில் நடக்கும் திருட்டுகளை கண்டுபிடிப்பது, அம்மாவிடம் அப்பாவை விட்டுக்கொடுக்காம் பேசுவது என தனது துருதுரு நடிப்பால் பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தவர் பேபி ஆனி (அன் அலெக்சியா).29 வருடங்கள் கடந்திருந்தாலும், இப்போதும் அவ்வை சண்முகி படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு இருந்து வருகிறது. இந்த படத்தின் நடித்த பேபி ஆனி (அன் அலெக்சியா) இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் தெரியுமா? தற்போது சோசியல் மீடியா இன்ஃபுளுயன்சராக இருக்கிறார். அவ்வை சண்முகி படத்திற்கு பிறகு, 2000-ம் ஆண்டு ஹேரா பேரி என்ற படத்தில் நடித்திருந்தார். படிப்பு முக்கியம் என்பதால், படங்களில் தொடர்ந்து நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.அதே சமயம், ஹேரா பேரி திரைப்படம் கோடை விடுமுறை தினத்தில் படமாக்கப்பட்டதாகவும், அதன்பிறகு தமிழில் அர்ஜூனுடன் தாயின் மணிக்கொடி, இந்தியில் ஹத்ரயா ஆகிய படங்களில் நடித்திருந்தார். நடிப்பில் இருந்து விலகி பல வருடங்கள் ஆகிவிட்டாலும், பேபி ஆனி நடிப்பு இன்னும் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்காமல் தான் உள்ளது.