பொழுதுபோக்கு
உன் முகத்தை பாத்தா கூட்டம் வராது, நீ க்ளாமரா இல்லமா: பட போஸ்டரில் வில்லி முகம் வைத்த இயக்குனர்: நடிகை சஹானா வருத்தம்!

உன் முகத்தை பாத்தா கூட்டம் வராது, நீ க்ளாமரா இல்லமா: பட போஸ்டரில் வில்லி முகம் வைத்த இயக்குனர்: நடிகை சஹானா வருத்தம்!
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும், பாலா இயக்கத்தில் தாரை தப்பட்டை படத்தில் நடித்தபோது, தேவையே இல்லாமல் இயக்குனர் பாலா தன்னை திட்டியதாகவும், அந்த படத்திற்காக தான் இன்னும் சம்பளமே வாங்கவில்லை என்றும் நடிகை சஹானா கூறியுள்ளார்.தமிழ் சின்னத்திரையில், கண்ணான கண்ணே, தாலாட்டு ஆகிய சீரியலிகளில் நடித்துள்ளவர் சஹானா. ரேவதி தலைவாசல் விஜய் நடிப்பில் வெளியான அழகு, விஜய் டிவியின் பகல் நிலவு, உயிரே, சுந்தரி நீயும், சுந்தரன் நானும் ஆகிய சீரியல்களிலும் நடித்துள்ள இவர், பாலா இயக்கத்தில் வெளியான தாரை தப்பட்டை படத்தில் சசிகுமாரின் இசைக்குழுவில் ஒரு டான்சராக நடித்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், படத்திற்காக இதுவரை தான் சம்பளமே வாங்கவில்லை என்று நடிகை சஹானா கூறியுள்ளார்.சமீபத்தில் வாவ் தமிழா யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், எனக்கு 12-ம் வகுப்பு முடித்தவுடன், திரைத்துறைக்கு வர வேண்டும் என்று ஆசை அதனால் விஸ்காம் அல்லது இசை கல்லூரியில் படிக்க விரும்பினேன். ஆனால் வீ்ட்டில் இருப்பவர்கள் பிரைன்வாஷ் செய்து எனக்கு பிடிக்காத ஒரு படிப்பில் சேர்த்துவிட்டார்கள். அந்த நேரத்தில் உடல்நிலை சரியில்லாமல் போனதால், அதையே சாக்காக வைத்துக்கொண்டு கல்லூரிக்கு செல்வதை நிறுத்தவிட்டேன்.அதன்பிறகு வீட்டில் நான் நடிக்க வேண்டும் என்று சொன்னேன். முதலில் மறுத்தாலும் அவர்கள் சொன்ன சீனில் நான் நடித்து காட்டியதால் ஒப்புக்கொண்டார்கள். அதன்பிறகு வாய்ப்பு தேட தொங்கினேன். எங்கு சென்றாலும் நானும் என் அம்மாவும் தான் செல்வோம். பாலா சார் படத்தில் வாய்ப்பு கிடைத்தபோது, எனக்கு டான்ஸ் ஆடவே தெரியாது. ஆனாலும் அவர் என்னை தேர்வு செய்து, நான் டான்ஸ் கற்றுக்கொள்ளும் வரை படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருந்தார்.என் கேரக்டரில் நடிக்க இருந்த பெண் விசா முடிந்து வெளிநாடு சென்றுவிட்டதால் கடைசி நேரத்தில் நான் கமிட் ஆனேன். அந்த படத்தில் நடித்தது பெரிய அனுபவம். ஆனால் கடைசி நேரத்தில், நான் செய்யாத தவறுக்காக என்னை பாலா சார் திட்டினார். என்னால் பொருத்துக்கொள்ள முடியவில்லை. எனக்கு அடுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. இந்த படம் ஓடாது என்று அப்போது சொன்னேன். அந்த படம் இப்படி ஆனதற்கு நான் சொன்ன வார்த்தை தான் காரணமா என்று தோன்றும். அதே சமயம் நான் அப்போது இருந்த நிலைமைக்கு அப்படி பேசியது சரிதான் என்றும் தோன்றும்.இந்த படத்திற்கு பிறகு நான் பாலா சாரை சந்திக்கவும் இல்லை அவரிடம் பேசவும் இல்லை. அந்த படத்திற்கு எனக்கு இதுவரை சம்பளமும் தரவில்லை. கால் செய்தால் எடுக்கமாட்டார்கள் என்று தெரிந்து நான் கால் பண்ணவும் இல்லை. அதேபோல், நான் அதிகமாக க்ளாமர் காட்டி நடிக்க மாட்டேன். 17 வயதில் நான் ஹீரோயினாக நடித்தபோது, அந்த படத்தின் போஸ்டரில் வில்லியாக நடித்த நடிகைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.இது குறித்து இயக்குனரிடம் கேடடபோது, உன் முகத்தை போட்டால், கூட்டம் வராது. அந்த பொண்ணுதான் க்ளாமரா இருக்கு அதனால் தான் போஸ்டரில் அவரது படத்தை போட்டிருப்பதாக சொன்னார் இதை கேட்டு கடுமையாக கோபப்பட்டதாகவும். சஹானா கூறியுள்ளார்.