சினிமா

எஸ்.ஜே. சூர்யா இயக்கும் படத்தின் First Look இன்று வெளியீடு!அறிவிப்பு விடுத்த படக்குழு!

Published

on

எஸ்.ஜே. சூர்யா இயக்கும் படத்தின் First Look இன்று வெளியீடு!அறிவிப்பு விடுத்த படக்குழு!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக மட்டுமன்றி, வில்லனாகவும் தனக்கே உரித்தான நடிப்பில் ரசிகர்களை கவர்ந்துவரும் எஸ்.ஜே. சூர்யா. தற்போது இயக்குனர் அவதாரத்தில் மீண்டும் திரும்பியுள்ளார். இவர் இயக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘கில்லர்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.படத்தின் பூஜை சமீபத்தில் சிறப்பாக நடைபெற்றது. மேலும், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. “ஒருவன் காதலுக்காக, மற்றொருவன் மிஷனுக்காக” என்ற விசித்திரமான டாக் லைன் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.இந்தப் படத்தில் இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. Sri Gokulam Movies நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில், கதாநாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார். மற்ற நடிகர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.திரைப்படத்தின் முக்கியக் காட்சிகள் இந்தியா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் படமாக்கப்பட உள்ளது. தற்போது எஸ்.ஜே. சூர்யா நடித்த ‘சர்தார் 2’ மற்றும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ஆகிய திரைப்படங்கள் இறுதிக்கட்ட வேலைகளை முடித்துள்ள நிலையில், ‘கில்லர்’ படத்திற்கு ரசிகர்கள் உற்சாகமாகக் காத்திருக்கின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version